- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் மறுத்த காரணம் இதுதான், உண்மையான சிஷ்யன்னா இப்படித்தான் இருக்கணும்...

அந்த படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் மறுத்த காரணம் இதுதான், உண்மையான சிஷ்யன்னா இப்படித்தான் இருக்கணும் – வெளியான சீக்ரட்

- Advertisement -

நடிகர் ராகவா லாரன்ஸ் நடன இயக்குநராக தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். திரைக்கு பின்னால் இருந்து பல முக்கிய நடிகர்களை பாடல் காட்சிகளில் ஆட்டுவித்தவர். இயக்குநர் சரண் அவரை, அமர்க்களம் படத்தில் திரையில் ஆட வைத்தார். அதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றார்.

பார்த்தேன் ரசித்தேன், அற்புதம், முனி, காஞ்சனா போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபல நடிகரானார். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல், ஆதரவற்றோர் இல்லம் நடத்தி, மாணவர்களை படிக்க வைத்தல் பல நல்ல சேவைகளை செய்து, மக்கள் மனதில் இடம்பிடித்தார் லாரன்ஸ்.

- Advertisement -

சினிமா நடிகராக திரையில் நடித்தாலும், நடனம் ஆடினாலும் இதுபோன்ற சமூக சேவை செயல்களில் ஈடுபடும்போது மக்களின் கவனத்தை அதிகமாக அது ஈர்க்கிறது. அதனால் அதன்மூலமாக ரசிகர்கள் மத்தியில் பலமடங்கு வரவேற்பை பெற்ற நடிகராக மாஸ்டர் ராகவா லாரன்ஸ் இருந்து வருகிறார்.

இந்நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் ஒரு படத்தில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடிப்பதாக சில மாதங்களுக்கு முன்பே முடிவானது. படத்தை, லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர் ரத்தனக்குமார் இயக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இந்த படத்தில் நாயகியாக நடிக்க நயன்தாராவும் ஒத்துக்கொண்டதாக தகவல் பரவியது.

- Advertisement -

ஆனால் ஒரு கட்டத்தில், இந்த படத்தில் நடிக்கவில்லை என்று நயன்தாரா விலகிக்கொண்டார். பிறகு படத்தின் இயக்குநரை மாற்றினால், இந்த படத்தில் நடிக்கிறேன் என ராகவா லாரன்ஸ்சும் விலகிவிட்டார். இதற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது.

அதாவது லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் இணை எழுத்தாளராக ரத்தனக்குமார் செயல்பட்டார். அப்போது லியோ விழாவில் பேசிய அவர், கழுகு எவ்வளவு உயர பறந்தாலும், தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்க கீழே இறங்கி வந்துதான் ஆகணும் என ரஜினியை தாக்கி பேசி இருந்தார். அதனால், தனது தலைவர், குரு ரஜினியை தாக்கி பேசிய ஒரு இயக்குநர் படத்தில் ரஜினியின் சிஷ்யன் நான் நடிக்க கூடாது என்ற முடிவில்தான் அந்த படத்தை விட்டு விலகி இருக்கிறார் ராகவா லாரன்ஸ். இப்போது அவரே இயக்கி, ஹீரோவாக நடிக்கும் ஒரு படத்தின் டிஸ்கஷனில் பிஸியாக இருக்கிறார் லாரன்ஸ்.

- Advertisement -

சற்று முன்