- Advertisement -
Homeபொழுதுபோக்குஅது அப்படி கிடையாது, தனுஷ் நடிப்பில் உருவாகிய குபேரா படம் குறித்த லேட்டஸ்ட் தகவல், இதை...

அது அப்படி கிடையாது, தனுஷ் நடிப்பில் உருவாகிய குபேரா படம் குறித்த லேட்டஸ்ட் தகவல், இதை ரசிகர்களே எதிர்பார்க்கலையே? – ஆனா அந்த விஷயத்துல அப்பட்டமா தெரிஞ்சுடுமே ப்ரோ?

- Advertisement -

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். நடிகராக மட்டுமின்றி இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமையாளராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான ராயன் படம் மிகப்பெரிய வெற்றியை தந்தது.

இப்போது தனுஷ், இட்லிக்கடை என்ற படத்தை இயக்கி வருகிறார். தேனி, மதுரை, திண்டுக்கல், பொள்ளாச்சி பகுதிகளில் படப்பிடிப்பை முடித்துள்ள இயக்குனர் தனுஷ் அடுத்ததாக இட்லி கடை படப்பிடிப்பை துபாய் அல்லது ஜப்பானில் நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அல்லது தாய்லாந்திலும் நடத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இட்லி கடை படத்தில் நாயகியாக நித்யாமேனன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மத்திய அரசின் சிறந்த நடிகை தேசிய விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் சத்யராஜ், ராஜ்கிரணும் நடிக்கின்றனர்.

இதற்கிடையே தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் பிச்சைக்காரன் கேரக்டரில் தனுஷ் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், வரும் டிசம்பர் 27ம் தேதி இந்த படம் வெளியாக உள்ளது. நாகர்ஜூனா இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். நடிகை ராஷ்மிகா மந்தனா தனுஷூக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்குவதால், இந்த படம் நேரடியான தெலுங்கு படமாக உருவாகிறது. மேலும் பான் இந்தியா படமாகவும் இருப்பதால் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பிற மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு இந்த படம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் இரு மொழிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, நேரடியாக தமிழில் ரிலீஸ் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் அப்படி நேரடி தமிழ் படமாக இது வெளியாகும் பட்சத்தில் ஆந்திரா, திருப்பதியில் எடுக்கப்பட்ட காட்சிகளை படத்தில் காட்டும் போது அதை தமிழகத்தில் உள்ள பகுதிகளாக படத்தில் சொல்வார்கள். ஆனால் படம் பார்ப்பவர்களுக்கு இது தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் அல்ல என்று தெளிவாக தெரிந்துவிடும். அப்போது இது தெலுங்கில் நேரடியாக எடுக்கப்பட்ட படம் என்ற உண்மையும் புரிந்துவிடும் என்று ரசிகர்கள் இப்போதே கூறுகின்றனர்.

சற்று முன்