- Advertisement -
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் சரவணன் கூறியதாவது, என்னோட 26வது வயசுல நான் டி ராஜேந்தர் டைரக்ஷன்ல பெற்றெடுத்த பிள்ளை என்ற படத்தில் நடிச்சிட்டு இருந்தேன். அப்போ அவர் என்கிட்ட வந்து உச்சனை உச்சன் பார்த்தால் பிச்சை எடுப்பாய். நீ பிச்சை எடுக்க போறேடான்னு சொன்னாரு. அண்ணே என்ன அண்ணே இப்படி சொல்லிட்டீங்க? எனக்கு இப்போது 13 படங்கள் இருக்கிறது என்று சொன்னேன். எல்லா படமும் இருக்கும், ஆனா ஒருத்தன் கூட வரமாட்டான்னு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே நடந்துச்சு. என்னோட 29 வயசுக்கு அப்புறம் வீட்டில் உட்கார்ந்தேன். அப்புறம் 40 வயசுகு்கு மேல நீ நல்லா இருப்பேன்னு சொன்னாங்க. அதே மாதிரி என்னுடைய 40 வயசுல நான் சித்தப்பு கேரக்டர்ல நடிச்ச பருத்திவீரன் படம் வெளியானது என்று நடிகர் சரவணன் கூறியிருக்கிறார்.





