- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரபல பாடகரை நீங்க தப்பா பாடறீங்க என நேரடியாக விமர்சித்த நடிகர் சசிக்குமார் - கடைசியில்...

பிரபல பாடகரை நீங்க தப்பா பாடறீங்க என நேரடியாக விமர்சித்த நடிகர் சசிக்குமார் – கடைசியில் அந்த பாடகர் செய்த ஹைலைட்டான சம்பவம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக நடிகராக வலம் வருபவர் சசிக்குமார். சமீபத்தில் சசிக்குமார் சிம்ரன் நடித்த டூரிஸ்ட் பேமிலி படம் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. பார்க்கிங் குட்நைட் லப்பர் பந்து குடும்பஸ்தன் படங்களின் வரிசையில் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு நல்ல வெற்றியை இந்த படம் தந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த டிவி சேனல் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சசிக்குமார் பங்கேற்றார். அதில் சினிமா பின்னணி பாடகர் மனோ, பாடகி சின்னக்குயில் சித்ரா உள்ளிட்டோரும் இருந்தனர். அப்போது சின்னதம்பி படத்தில் இடம்பெற்ற தூளியிலே ஆட வந்த வானத்து மின்விளக்கே என்ற பாடலை பாடகர் மனோ பாடினார்.

- Advertisement -

இளையராஜா இசையில் சின்னதம்பி படத்துக்காக பாடகர் மனோ பாடிய அந்த பாடல், அந்த காலகட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பை பாராட்டை பெற்ற பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பாடலை தான் பாடகர் மனோ இந்நிகழ்ச்சியில் பாடினார். அப்போது குறுக்கிட்ட நடிகர் சசிக்குமார், நீங்க பாட்டை தப்பா பாடறீங்க என்று விமர்சனம் செய்தார்.

தாய் அடிச்சு வலிச்சது இல்லே இருந்தும் நான் அழுவேன் என்பது தவறு. தாய் அடிச்சு படிச்சது இல்லே என்றுதான் வர வேண்டும் என்று சசிக்குமார் கூறினார். இல்லே, தாய் அடிச்சு வலிச்சது இல்லே என்பதுதான் சரி, தாய் அடிச்சு படிச்சது இல்லே என்று பாடலில் வராது என்று மனோ பதில் கூற, அங்கிருந்த சிலர் சசிக்குமார் சொல்வதே சரி என்றனர்.

- Advertisement -

இதனால் மனோவும் வேறு வழியின்றி அதை ஏற்றுக்கொண்டார். அதற்கு விளக்கமளித்த நடிகர் சசிக்குமார், கிடாரி என்ற படத்தில் நான் நடித்த போது வேண்டும் என்றே ரவுடிகளிடம் வம்பு இழுப்பதற்காக இந்த பாட்டில் தாய் அடிச்சு வலிச்சது இல்லே என்பதை தாய் அடிச்சு படிச்சது இல்லே என்று தப்பாக சொல்லி அவர்களை அடிப்பேன் என்று கூறினார்.

கிடாரி படத்தில் வந்த அந்த காட்சியை தான் நடிகர் சசிக்குமார் இப்படி கலாய்க்கும் விதமாக பாடகர் மனோவிடம் வம்பு செய்கிறார் என்பதை அங்கிருந்த பார்வையாளர்கள் பலர் புரிந்துக் கொண்டனர். ஆனால் அந்த படம் பார்க்காதவர்கள், நடிகர் சசிக்குமார் உண்மையிலேயே பாடகர் மனோவை விமர்சிக்கிறாரா என அதிர்ச்சியில் இருந்தனர். ஆனால் கடைசியில் மனோ அந்த பாட்டை சசிக்குமார் சொன்னது போல, தாய் அடிச்சு படிச்சது இல்லே என்றே பாடி அங்கிருந்தவர்களை எல்லாம் சிரிக்க வைத்தார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்