தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் படம் மூலம் இயக்குனராக, நடிகராக அறிமுகமானவர் சசிக்குமார். இயக்குனர் பாலாவுடன் சேது படத்தில் பணிபுரிந்தவர். பிறகு இயக்குனர் அமீர் இயக்கிய மௌனம் பேசியதே ராம் பருத்திவீரன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக தொழில் கற்றவர்.
சமுத்திரக்கனியை, வில்லன் கேரக்டரில் சுப்ரமணியபுரம் படத்தில் சசிக்குமார் அறிமுகப்படுத்தினார். அதே போல் சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படத்தில் சசிக்குமார் நாயகனாக நடித்திருந்தார். இன்று வரை சசிக்குமார், சமுத்திரக்கனி நெருக்கமான நண்பர்களாக இருக்கின்றனர். இருவரும் அமீரிடம் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்தவர்கள்.
சசிக்குமார் நடித்த பல படங்கள் பெரிய வெற்றியை பெற்றுள்ளன. சுந்தரபாண்டியன் குட்டிப்புலி ஈசன் நாடோடிகள் 2 கருடன் அயோத்தி வெற்றிவேல் தாரை தப்பட்டை கொடிவீரன் கிடாரி உடன்பிறப்பே என பல படங்களில் நடித்தவர். குறிப்பாக பேட்ட படத்தில் ரஜினியுடன் மாலிக் என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
பேட்ட படத்தில் நடித்தது குறித்து நேர்காணல் ஒன்றில் நடிகர் சசிக்குமார் கூறியதாவது, பேட்ட படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் கேரவனை விட்டு இறங்கி விட்டால் பிறகு கேரவனுக்குள் செல்ல மாட்டார். ஷாட் இல்லை என்றால் கூட கேரவனுக்கு வெளியே சேர் போட்டு உட்கார்ந்து கொள்வார். பிரேக் சொன்ன பிறகும் பிரேக்கா, நான் கேரவனுக்கு போலாமா என இயக்குனரிடம் கேட்டுவிட்டுதான் செல்வார்.
அவருக்கு காஸ்ட்யூம் மாற்ற வேண்டும். பக்கத்தில் ரோடு இருக்கிறது. கேரவனுக்குள் செல்லாமல், அப்படியே கைலியை கட்டி அங்கேயே காஸ்ட்யூமை உடனே மாற்றிவிட்டார். ஏனென்றால் கேரவனுக்குள் சென்றால் நேரமாகும் என்பதால் அங்கேயே டிரஸ்சை மாற்றி விட்டார்.
அப்போது என்னுடைய அசிஸ்டென்ட் என்னை காஸ்ட்யூம் மாற்ற கேரவனுக்கு வருமாறு கூப்பிட்டார். ரஜினியை காட்டி யாருடா அவர் என்றேன், சூப்பர் ஸ்டார் என்றார். அவரே ரோட்டுல நின்னு டிரஸ் மாத்தும்போது நாம தெருவுல நின்னு கூட மாத்தலாம்டா என்று சொல்லி நானும் அங்கேயே டிரஸ்சை மாற்றிக்கொண்டேன். இப்படி நிறைய விஷயங்களிடம் ரஜினியிடம் கற்றுக்கொண்டேன் என்று சசிக்குமார் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





