- Advertisement -
Homeபொழுதுபோக்குஇளையராஜா படத்திற்கு இசையமைக்கப் போவது இவர்தானா... ஆனால் அதுலயும் ஒரு சில சிக்கல் இருக்கே...

இளையராஜா படத்திற்கு இசையமைக்கப் போவது இவர்தானா… ஆனால் அதுலயும் ஒரு சில சிக்கல் இருக்கே…

- Advertisement -

நடிகர் தனுஷ் தற்போது குபேரா படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலா இயக்கும் இந்த திரைப்படத்தில், நாகர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதன் சூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கிரைம் திரில்லர் பாணியில் இந்த திரைப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடிகர் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் மற்றும் 51வது படமான குபேரா என இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இளையராஜாவின் பயோபிக் படத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது. அந்த நிகழ்ச்சியில் இளையராஜா வெற்றிமாறன் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தத் திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

ராக்கி, சாணி காகிதம், கேப்டன் பில்லர் என மூன்று திரைப்படங்களையும் ரத்தமும் சதையுமாக எடுத்த ஒருவர் எப்படி இதை உணர்வுபூர்வமாக எடுக்கப் போகிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர். இருப்பினும் அவர் மீது முழு நம்பிக்கை வைத்து தனுஷ் இந்த ப்ராஜெக்ட் கொடுத்திருக்கிறார். படத்திற்கான வேலைகள் மிக விரைவில் ஆரம்பமாகும் என கூறப்படுகிறது.

- Advertisement -

இப்படியான சூழலில் தற்போது எழுந்திருக்கும் ஒரே கேள்வி இளையராஜா படத்திற்கு யார் இசையமைப்பார்கள் என்று தான். இது தொடர்பான நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறனும், இந்த படத்தின் இசையை கேட்க தான் ஆர்வமாக இருப்பதாக கூறி இருந்தார். இதற்கு இளையராஜாவே இசையமைக்க இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. ஆனால் தனது பயோபிக் படத்தில் தானே இசையமைத்தால் நன்றாக இருக்காது என்ற முடிவில் இசைஞானி இருக்கிறாராம்.

இப்படியான சூழலில் ஏ ஆர் ரகுமானிடம் தயாரிப்பு குழு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் இசைப்புயலோ, இந்த விவகாரத்தில் சற்று தயக்கம் காட்டியதாக தகவல் கசிந்து உள்ளது. தான் இசையமைக்க வேண்டுமா என்பது குறித்து மறுபரிசீலனை செய்யுங்கள் என்று அவர் தயாரிப்பு நிறுவனத்திடம் கூறியதாகவும் தெரிகிறது. இருப்பினும் அவரே இசையமைத்தால் நன்றாக இருக்கும் என படக்குழு விரும்புகிறதாம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்