- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் படத்துக்கு நடிகர் சீமான் எதிர்ப்பு - தியேட்டர்களை முற்றுகையிட்ட...

நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் படத்துக்கு நடிகர் சீமான் எதிர்ப்பு – தியேட்டர்களை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது!

- Advertisement -

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய் தேவரகொண்டா ரெட்டி. இவர் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் புஷ்பா பட நாயகி ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவர கொண்டாவும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்துக்கொள்ள இருப்பதாகவும் தகவல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இயக்குனர் கவுதம் தின்னனூரி இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் ஆகியோர் நடிப்பில் தெலுங்கில் உருவாகி உள்ள படம் கிங்டம். இது தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட நிலையில் இந்த படம் இன்று ரிலீஸ் ஆகி இந்தியா முழுவதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

- Advertisement -

கிங்டம் படத்தின் கதை இலங்கையில் நடைபெறுவது போன்ற கதைக்களத்தில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் இலங்கை தமிழர்களை குற்றப்பரம்பரை போல சித்தரிப்பதாகவும் அங்குள்ள மலையாளத் தமிழர்களை இலங்கை தமிழர்கள் ஒடுக்கினார்கள் என்பது போன்ற காட்சிகளும் படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

இப்படி இலங்கை தமிழர்களை அவமதிக்கும் விதமான ஒரு கதைக்களத்தில் உருவாகி உள்ளதாக கிங்டம் படத்துக்கு நாம் தமிழர் கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் நடிகர் மற்றும் இயக்குனர் சீமான் எதிர்ப்பு தெரிவித்தார். கிங்டம் படத்தை தமிழகத்தில் திரையிட்டால் தியேட்டர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்றும் சீமான் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இன்று ஆகஸ்ட் 5ம் தேதி தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் கிங்டம் படம் திரையிடப்பட்டது. கிங்டம் படம் ரிலீஸ் செய்யப்பட்ட தியேட்டர்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். சில ஊர்களில் தியேட்டர்களில் முன்பு வைக்கப்பட்டிருந்த கிங்டம் படத்தின் போஸ்டர்கள், பேனர்களை நாம் தமிழர் கட்சியினர் ஆவேசமாக கிழித்து எறிந்தனர்.

கிங்டம் படம் ரிலீஸான தியேட்டர்களில் சில ஊர்களில், முன் எச்சரிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் நாம் தமிழர் கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோவை ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் தியேட்டர்கள் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர். இதனால் பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

சற்று முன்