- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கமலுக்கு ஓகே சொன்ன அவர் நடிகர் ரஜினிக்கு நோ சொன்னது ஏன்? பிரபல நடிகர்...

நடிகர் கமலுக்கு ஓகே சொன்ன அவர் நடிகர் ரஜினிக்கு நோ சொன்னது ஏன்? பிரபல நடிகர் மீது எழுந்த திடீர் சர்ச்சை – ஒருவேளை அதுதான் காரணமோ?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் கடந்த 14ம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்திருக்கிறார். சத்யராஜ் ஸ்ருதிஹாசன் போன்றவர்கள் முக்கிய கேரக்டர்களில் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

மேலும் இந்த படத்தில் தெலுங்கு பட நடிகர் நாகர்ஜூனா இந்தி பட நடிகர் அமீர்கான் மலையாள பட நடிகர் சௌபின் சாஹிர் கன்னட பட நடிகர் உபேந்திரா ஆகியோரும் நடித்திருக்கின்றனர். ஆனால் இதில் வில்லன்களாக வரும் சௌபின் சாஹிர் மற்றும் நாகர்ஜூனா அளவுக்கு உபேந்திரா, அமீர்கான் போன்றவர்களுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை.

- Advertisement -

அதிலும் படமே முடிந்த பிறகு பிரதான வில்லன் நாகர்ஜூனா கொல்லப்பட்ட பிறகு உபரியாக சேர்க்கப்பட்ட ஒரு காட்சியாக அமீர்கான் வரும் கேமியோ காட்சி படத்தின் இறுதியில் வருகிறது. அதிலும் இந்த காட்சி ரசிகர்களின் மனதில் ஒட்டவே இல்லை. இலவச இணைப்பாக அமீர்கான் அந்த கேமியோ ரோலில் நடித்தது போல்தான் ரசிகர்களுக்கு உள்ளது.

இந்நிலையில் கூலி படத்தில் முதலில் நடிக்க அழைக்கப்பட்டவர் நடிகர் ஷாருக்கான்தான். ஆனால் அவர் நடிக்க இருந்தது நாகர்ஜூனா கேரக்டரா, அல்லது கடைசியாக வரும் அமீர்கான் கேரக்டரா என்பது தெரியவில்லை. அதிலும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் வில்லனாக தன்னை காட்ட நடிகர் ஷாருக்கான் விரும்பியிருக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இதற்கிடையே நடிகர் கமல்ஹாசனுடன் ஹேராம் படத்தில் ஷாருக்கான் நடித்திருந்தார். கமலுடன் நடிக்க சம்மதித்தவர், கூலி படத்தில் ரஜினியுடன் நடிக்க சம்மதிக்காதது ஏன் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அமீர்கான் நடித்தது போன்ற ஒரு டம்மி ரோலில் அவர் நடிக்க விரும்பியிருக்க மாட்டார். அதுதான் காரணம் என்றும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் கூலி படத்தில் கேமியோ ரோலில் நடிகர் அமீர்கான் நடிக்க ரூ. 20 கோடி சம்பளம் தரப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் நான் மிகவும் மதிக்கும் விரும்பும் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தில் கூலி படத்தில் நடிக்க நான் சம்பளம் எதுவும் வாங்கவில்லை, சம்பளம் பற்றி நான் யோசிக்கக்கூட இல்லை என்று சமீபத்தில் நடிகர் அமீர்கான் கூறியிருந்தததும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்