- Advertisement -
Homeபொழுதுபோக்குதக்லைஃப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் செய்த தரமான சம்பவம் - நான் மிரண்டு போயிட்டேன் என...

தக்லைஃப் படத்தில் நடிகர் கமல்ஹாசன் செய்த தரமான சம்பவம் – நான் மிரண்டு போயிட்டேன் என உண்மையை போட்டுடைத்த நடிகர் சிம்பு!

- Advertisement -

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த படம் தக்லைஃப் வருகிற ஜூன் 5ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் நடிகர் சிலம்பரசன் முதன்முறையாக நடிகர் கமலுடன் இணைந்து நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் திரிஷா அசோக் செல்வன் அபிராமி மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர். ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

தக்லைஃப் படத்தின் இசை வெளியீடு மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா வரகிற 16ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடப்பதாக இருந்தது. ஆனால் இந்தியா பாகிஸ்தான் எல்லை பதட்டம் காரணமாக, அந்த விழாவை தக்லைஃப் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் ஒத்தி வைத்துள்ளார். போர் நிறுத்தம் என்று கூறப்படுவதால் விரைவில் இந்த விழா குறித்த தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிம்பு கூறியதாவது, தக்லைஃப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பத்தில் 2 நாட்கள் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. கமல் சாருடன் முதன் முறையாக நடிக்கிறேன். மணிரத்னம் சார் இயக்கும் படம் என்றெல்லாம் ஒரு நடுக்கம் மனசுக்குள் இருந்தது. பிறகு கமல் சார் தந்த ஊக்கத்தால் நன்றாக நடித்தாக வேண்டும் என்ற ஒரு உறுதி எனக்கு வந்துவிட்டது.

ஆனால் இந்த படத்தில் நடிப்பது எனக்கு ஈஸியாக இருந்தது. ஏனென்றால் ஒரு காட்சியில் எந்த மாதிரி எக்ஸ்பிரசன் கொடுக்க வேண்டும் என்ற குழப்பம், சந்தேகம் வந்தால் உடனே கமல் சார் கிட்ட போய் சொன்னால், அவர் அதை நடித்து ரியாக்சன் காட்டுவார். அதை அப்படியே கேட்ச் பண்ணி நடித்து விடுவேன். மணி சாரும் சூப்பர் என உடனே ஓகே சொல்லி விடுவார்.

- Advertisement -

படப்பிடிப்பில் ஒரு நாள், 6 அல்லது 7 கேரக்டர்கள் ஒரு காட்சியில் நடிக்க வேண்டும். அந்த நேரத்தில் கமல் சார் அந்த 7 பேர் மாதிரியும் அடுத்தடுத்து நடித்து காட்டினார். நான் அப்படியே மிரண்டு போயிட்டேன். அந்நியன் படம் மாதிரி 2 பேர் மாறி மாறி பேசி நடிக்க முடியும். ஆனால் ஒரு காட்சியில் 7 பேர் நடிப்பதை அவர் ஒருவரே மாறி மாறி அப்படி நடித்து காட்டியதை பார்த்து அசந்து போய்விட்டேன் என்று நடிகர் சிம்பு கூறியிருக்கிறார்.

அப்போது நடிகர் கமலும் அருகில் அமர்ந்திருந்தார். அதற்கு பதிலளித்த நடிகர் கமல்ஹாசன், கே பாலசந்தரிடம் நான் பாடம் கற்று வந்தவன். சார் போஸ்ட் என்ற ஒரு டயலாக்கை பேசும் போஸ்ட் மேன் கூட, இது என்ன நெம்பர் 23 ஆ என்று வீட்டு கதவை பார்த்து அவர் கேட்பது போல்தான் காட்சியை வைப்பார். அப்படி அவர் என்றால் நானும் அப்படித்தானே இருப்பேன் என்று விளக்கம் அளித்தது பலத்த கைதட்டலை பெற்றது.

- Advertisement -

சற்று முன்