இன்றைய ஆண்ட்ராய்டு யுகத்தில் பெரும்பாலான பிரபலங்கள் அடிக்கடி விமர்சனங்கள் சர்ச்சைகளில் சிக்கி விடுகின்றனர். குறிப்பாக அரசியல் தலைவர்கள் சினிமா பிரபலங்கள் விளையாட்டு வீரர்கள் தான் அடிக்கடி இதுபோன்ற சிக்கல்களை சந்திக்கின்றனர். அதிலும் சினிமா துறை சார்ந்தவர்கள்தான் அதிகமாக உள்ளனர்.
இப்படி சமூக வலைதளங்களில் மோசமான விமர்சனங்களை சந்தித்து வரும் நடிகர் நடிகைகளுக்கு நடிகர் சிம்பு நெத்தியடியான ஒரு தகவலை கூறியிருக்கிறார். தன்னை பற்றிய விமர்சனங்கள் வரும்போது அதை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும். எந்த மாதிரியான அந்த விமர்சனங்களை கையாள வேண்டும் என்று சிம்பு அவரது ஸ்டைலில் கூறியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிம்பு கூறியதாவது, நாம் வெளியே போகும் போது நிறைய இடங்கள் இருக்கும். ஒரு இடத்தில் சாக்கடை இருக்கும். ஒரு இடத்தில் சாப்பாடு இருக்கும். ஒரு இடத்தில் கோவில் இருக்கும். ஒரு இடத்தில் சர்ச் இருக்கும். இன்னொரு இடத்தில் மருத்துவமனை இருக்கும்.
இதில் நாம் எதை சூஸ் செய்கிறோம். எந்த இடத்துக்கு போகிறோம் என்பதை பொருத்துதான் இருக்கிறது. அதே மாதிரி இண்டர்நெட்டுல எல்லாமே இருக்கிறது. நீங்க பார்க்கும் போது போட்டோ இருக்கும். ஒரு படத்தோட தகவல் இருக்கும். சிலர் சிலரை திட்டி பதிவு போட்டிருப்பாங்க. நீங்க இதுல எதை சூஸ் பண்றீங்க என்பதுதான் முக்கியம்.
இப்போது உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் சிம்பிளா ஒண்ணு சொல்றேன். எல்லோரும் கமெண்ட் போடுவாங்க இல்லே. இந்த கமெண்ட்ஸ் படிக்கும் போது எல்லாரும் என்ன நினைப்பாங்க என்றால் நீங்க ஒரு வீடியோ போட்டிருப்பீங்க. அதுக்கு நிறைய கமெண்ட்ஸ் வரும். அதுல ஒருத்தவர் திட்டியிருப்பாங்க. நீங்க பயங்கரமா கோபப்படுவீங்க.
ஆனால் நான் என்ன பண்ணுவேன்னா நான் அதை எப்படி பார்ப்பேன்னா ஒவ்வொரு கமெண்ட் படிக்கும் போதும் அவங்க யாருன்னு நான் பார்ப்பேன். அந்த கமெண்ட் படிக்கும் போது அவங்க யாருன்னு நமக்கு தெரியும். அதனால் அவங்க நம்மளை திட்டலே. அவங்க யாருன்னு நமக்கு சொல்றாங்க அதை நீங்க புரிஞ்சுகிட்டீங்க என்றால் நல்லா இருக்கும் என்று நடிகர் சிம்பு பேசியிருக்கிறார்.





