- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அதை செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை… மனதளவில் அதற்கு நான் தயாராக வேண்டும் -...

நான் அதை செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை… மனதளவில் அதற்கு நான் தயாராக வேண்டும் – நடிகர் சிம்பு ஆவேசம்!

- Advertisement -

இயக்குனர் மற்றும் நடிகர் டி ராஜேந்தரின் மூத்த மகன் சிம்பு. அப்பாவை போலவே அவரும் தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகராக இருந்து வருகிறார். தக்லைஃப் படத்துக்கு பிறகு இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ளார்.

நடிகர் சிலம்பரசன் 40 வயதுகளை கடந்த நிலையில் இன்னும் திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக கோலிவுட்டில் வலம் வருகிறார். நயன்தாராவும் சிம்புவும் ஒரு காலகட்டத்தில் நெருக்கமாக பழகிய நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவர்கள் காதல் பிரேக்கப் ஆகி விட்டது.

- Advertisement -

தொடர்ந்து சில நடிகைகளுடன் நடிகர் சிம்பு காதல் வயப்பட்டதாக தகவல் பரவுகிறது. அவர்கள் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வருவதாகவும் இணையத்தில் வைரலாகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் அவர்கள் வெறும் நண்பர்கள்தான். திருமணம் வரை செல்ல வாய்ப்பில்லை என்பது உறுதியாகி விடுகிறது.

இப்படி நடிகர் சிம்புவுக்கு ஏற்பட்ட காதல், அவரது திருமணம் என்று அடிக்கடி தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்துகிறது. அதற்கு பின்பு அது வெறும் வதந்தி என தெரிந்து விடுகிறது. இப்படி அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைவது தொடர்ந்து நடந்து வருகிறது.

- Advertisement -

இதற்கிடையே தனது திருமணம் குறித்த கேள்விக்கு நடிகர் சிம்பு பதில் சொன்ன ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த வீடியோவில் நடிகர் சிம்பு கூறியதாவது, இன்றைக்கு மொபைல் போன்கள் வந்த பிறகு மனித உணர்வுகள் மாறிவிட்டன. எவ்வளவு வேகத்தில் காதலிக்கிறார்களோ அதே வேகத்தில் பிரியவும் செய்கிறார்கள். எல்லாமே வேகவேகமாய் நடக்கிறது.

அதே நேரத்தில் ஆழமான உறவுகள் இப்போதும் இருந்து கொண்டு தான் இருக்கிறது. என்னை பொறுத்தவரை திருமணம் என்பது கட்டாயம் இல்லை. மனதளவில் நாம் தயாராக இருக்கும்போது மட்டுமே அதை செய்து கொள்ள வேண்டும். இந்த சமூகத்தை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக நான் ஒருபோதும் திருமணம் செய்து கொள்ளவே மாட்டேன் என்று நடிகர் சிம்பு அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்