- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் கடவுள் படப்பிடிப்பு முடித்த பிறகு இயக்குனர் அப்படி செய்வாருன்னு யாருமே எதிர்பார்க்கலே - நடிகர்...

நான் கடவுள் படப்பிடிப்பு முடித்த பிறகு இயக்குனர் அப்படி செய்வாருன்னு யாருமே எதிர்பார்க்கலே – நடிகர் சிங்கம்புலி சொன்ன அந்த சீக்ரெட் சம்பவம்!

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் நடித்த ரெட் மற்றும் நடிகர் சூர்யா நடிகை ஜோதிகா நடித்த மாயாவி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சிங்கம்புலி என்பது பலரும் அறியாத விஷயம். மாயாண்டி குடும்பத்தார் படத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் சிங்கம்புலி.

தொடர்ந்து மனம்கொத்தி பறவை நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் முத்துக்கு முத்தாக கருப்பன் மகாராஜா தாய்கிழவி என பல படங்களில் நடித்து இன்று காமெடி கேரக்டர் குணச்சித்திர கேரக்டர் என எதுவாக இருந்தாலும் அதில் மிக சிறப்பான அழுத்தமான நடிப்பை தரக்கூடிய ஒரு பண்பட்ட கலைஞராக நடிகர் சிங்கம்புலி வலம் வருகிறார்.

- Advertisement -

நடிகர் சிங்கம்புலி இயக்குனர் பாலாவிடம் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணிசெய்தவர். நான் கடவுள் படத்தில் அவர் ஒரு கேரக்டரில் நடித்தும் இருக்கிறார். அந்த படத்தில் நடித்த பிறகுதான் அவருக்கு தொடர்ந்து பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. எனினும் காமெடி கேரக்டரில் அவரது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் கவனத்தை பாராட்டை பெற்று வருகிறது.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சிங்கம்புலி கூறியதாவது, நான் கடவுள் படம் எடுத்த முடிஞ்ச உடனே அந்த படத்தில் நடித்த எல்லோரையும் இயக்குனர் பாலா சென்னைக்கு கூட்டிட்டு வந்து ஒரு ஸ்டார் ஹோட்டல்ல ரூம் போட்டு தங்க வச்சார்.

- Advertisement -

அவங்க எல்லோருக்கும் மூணு வேளை நல்லா வகை வகையா சாப்பாடு போட்டு தனியா ஒரு பஸ் வச்சு ஏழு நாள் சென்னையை சுத்தி காட்டவும் ஏற்பாடுகளை செஞ்சார். அடுத்த நாள் இளையராஜா சார் வீட்டுக்கு அவர்களை எல்லாம் கூட்டிட்டு போய் ராஜா சார் கையால் அவர்களை கிப்ட் வாங்க வச்சு அவர் கூட நின்னு போட்டோ எடுத்து பத்து நாள் கழித்து தான் அவர்களை எல்லாம் ஊருக்கு அனுப்பி வச்சார பாலா.

எதுக்கு இப்படி எல்லாம் பண்ணினீங்கன்னு என்று நான் அவரிடம் கேட்டேன். இதையெல்லாம் அவங்க என்னைக்கு பார்க்க போறாங்கன்னு சொன்னார் என்று சிங்கம் புலி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். தன்னுடைய படங்களில் நடிப்பவர்களை இயக்குனர் பாலா அடித்து துன்புறுத்துவார் என்று புகார் கூறப்படும் நிலையில், அவர்கள் மீது அக்கறை எடுத்து இப்படி செய்ததாக நடிகர் சிங்கம்புலி கூறியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்