- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த மூணு விஷயமும் நடிகர் வடிவேலு கிட்ட இல்லே, அதுதான் எதுவுமே சரியா இல்லே -...

அந்த மூணு விஷயமும் நடிகர் வடிவேலு கிட்ட இல்லே, அதுதான் எதுவுமே சரியா இல்லே – வடிவேலுவை எக்குத்தப்பாக விமர்சித்த பிரபல காமெடி நடிகர்

- Advertisement -

சினிமா தியேட்டரில், அல்லது வீட்டில் உள்ள டிவி திரையில் நடிகர் வடிவேலுவை பார்த்தாலே பலருக்கும் சிரிப்பு வந்துவிடும். அது ஒரு காலகட்டமாக இருந்தது. ஆனால் இப்போது அவரது காமெடி காட்சிகள் கூட சிரிப்பை வரவழைக்காமல் பலருக்கும் வெறுப்பை வர வைக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் இன்றும் மதிக்கப்படுகிறார், பலராலும் போற்றப்படுகிறார் என்றால், அவரது பண்புகள்தான் காரணம். யாரையும் எந்த இடத்திலும் தரக்குறைவாக விமர்சிக்கும் குணத்தை யாருமே அவரிடம் பார்த்தது இல்லை. இது எம்ஜிஆரிடம் காணப்பட்ட சிறந்த பண்புகளில் ஒன்று.

- Advertisement -

ஆனால் தன்னை வளர்த்துவிட்டவர்களையே மதிக்காமல் நடந்துக்கொண்டு அதனால் மற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்கிக்கொண்டவர்தான் நடிகர் வடிவேலு. சின்னக்கவுண்டர் படம்தான், அவர் மற்ற படங்களில் நடிக்க காரணமாக இருந்தது. அந்த படத்தில் வடிவேலு நடிக்க வாய்ப்பு தந்ததே விஜயகாந்த் தான்.

அதற்கு முன்பு, என் ராசாவின் மனசிலே படத்தில், வடிவேலுவை நடிக்க வைத்ததே அந்த படத்தின் ஹீரோ ராஜ்கிரண்தான். ஆனால் ஒரு கட்டத்தில் ராஜ்கிரண் நடிக்கும் படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார் வடிவேலு. கலைஞர் 100 விழாவில், ராஜ்கிரண் வந்த பேட்டரி காரில் அவருடன் பயணிக்க மறுத்து இறங்கிச் சென்றவர்தான் வடிவேலு.

- Advertisement -

வடிவேலுவுடன் பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்தவர் சிங்கமுத்து. சமீபத்தில் அவர் ஒரு நேர்காணலில் கூறியதாவது, நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு வடிவேலு வரவில்லை. மனோபாலாவுடன் சுத்திக்கொண்டிருந்தவர் வடிவேலு. ஆனால் அவரது மறைவுக்கும் வரவில்லை. மயில்சாமி இறந்த போதும் வரவில்லை. வடிவேலு வரமாட்டார். அதுதான் அவரது கெட்ட குணம்.

ஒரு மனிதன் நல்ல குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும். நல்ல நண்பர்களை அருகில் வைத்திருக்க வேண்டும். அல்லது நல்ல புத்தகங்களை படித்திருக்க வேண்டும். இந்த மூன்று விஷயங்களுமே வடிவேலுவிடம் இல்லை. அவரது வளர்ப்பும் சரியில்லை. யாராவது இறந்தால், தண்ணிய போட்டுக்கிட்டு சந்தோஷமா இருப்பார். நிஜ வாழ்க்கையில் வடிவேலு வில்லன் என்று கூறியிருக்கிறார் காமெடி நடிகர் சிங்கமுத்து.

- Advertisement -

சற்று முன்