- Advertisement -
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் அரசன் படம் உருவாகி வருகிறது. இந்த படம் முதலில் தீபாவளி ரிலீஸ் என்றனர். பிறகு பொங்கல் ரிலீஸ் என்றனர். ஆனால் அடுத்த 2027ம் ஆண்டு இறுதிக்குள் இந்த படம் வெளியாகுமா? என்பதே சந்தேகமாக உள்ளது. இந்த நிலையில் வருகிற தீபாவளிக்கு அரசன் படத்தின் பிரமோ ஒன்றை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இதில் படத்தில் வரும் சில காட்சிகளும் பிரமோவுக்காகவே எடுக்கப்பட்ட சில ஷாட்களும் இடம்பெற உள்ளன. இந்த பிரமோ அரசன் படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரிய ஹைப் ஏற்படுத்தும். பட்டி தொட்டி எங்கும் இந்த படத்தை பெரிய அளவில் பேச வைக்கும் என்றும் கூறப்படுகிறது. வியாபாரத்திலும் பெரிய பலம் கொடுக்கும் என்கின்றனர்.





