- Advertisement -
Homeபொழுதுபோக்குதன்னை நம்பி வந்த தயாரிப்பாளரை ஏமாற்றியவர் நடிகர் சிவகார்த்திகேயன்- பகிரங்கமாக குற்றம் சாட்டிய பிரபலம்!

தன்னை நம்பி வந்த தயாரிப்பாளரை ஏமாற்றியவர் நடிகர் சிவகார்த்திகேயன்- பகிரங்கமாக குற்றம் சாட்டிய பிரபலம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் வலம் வருகிறார். அமரன் படத்தை தொடர்ந்து இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இது அவரது 25வது படமாகும். இதற்கு முன்பாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் மதராஸி படமும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

கடந்தாண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை, அபார வெற்றியை பெற்ற படம் அமரன். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்திருந்தார். இந்த படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடிகர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் தலைமையில் நடந்தது.

- Advertisement -

இந்த விழாவில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், இதுவரை நான் நடித்த பல படங்களில் எனது சம்பளத்தை பறித்துக்கொண்டார்கள். முழுமையாக சம்பளமே தரவில்லை. படம் ரிலீஸாகும்போது பாதி பணத்தை தராமல் பிடுங்கி விடுவார்கள் என்று பேசியிருந்தார். அமரன் படத்தில் நடித்த போது எனக்கு 6 மாதங்களுக்கு முன்பே முழு சம்பளமும் கிடைத்து விட்டது என்றும் கூறியிருந்தார்.

இதுகுறித்து மூத்த சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, அமரன் படத்தின் வெற்றிவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை பிடுங்கிக் கொள்ள ஒரு கூட்டம் இருப்பதாக பேசியிருக்கிறார். உண்மையில் சிவகார்த்திகேயன் தான் மற்றவர்கள் மீது தன்னுடைய கடனை சுமத்தினார்.

- Advertisement -

அவருடன் இருந்த ஆர் டி ராஜா என்பவரை பினாமியாக வைத்து தனது படங்களை தயாரித்த வகையில், 75 கோடி ரூபாய் வரை கடன் ஏற்பட்டது. ஆர்டி ராஜா, இந்த கடன் உன்னால் தான் வந்தது எனக்கூற சிவகார்த்திகேயன் கடனை நானே ஏற்றுக்கொள்கிறேன் என முடிவெடுக்கிறார். ஆனால் தான் சம்பாதித்து இந்த கடனை அடைக்க அவர் முயற்சி செய்யவில்லை.

யார் இந்த 75 கோடி ரூபாய் கடனை ஏற்றுக்கொள்கிறார்களோ அவர்களுக்கு மூன்று படத்திற்கான கால்ஷீட் கொடுப்பதாக கூறுகிறார். அப்போது ஆர் ஜே ஆர் ராஜேஷ் என்பவர் உள்ளே வருகிறார். அவருக்கு மூன்று படங்களுக்கு கால்ஷீட் தருவதாக கூறிக்கொண்டு இரண்டு படங்களுக்கு மட்டும் சிவகார்த்திகேயன் கால்ஷீட் கொடுத்துள்ளார். தனது கடனை ஏற்றுக் கொண்ட தயாரிப்பாளருக்கு சிவகார்த்திகேயன் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் என்று அந்த நேர்காணலில் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி நேரடியாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்