- Advertisement -
Homeபொழுதுபோக்குஇசையமைப்பாளர் அனிருத் திருமணம் எப்போது? நடிகர் சிவகார்த்திகேயன் சொன்ன பதிலால் ஆடிப்போன ரசிகர்கள் - அப்போ...

இசையமைப்பாளர் அனிருத் திருமணம் எப்போது? நடிகர் சிவகார்த்திகேயன் சொன்ன பதிலால் ஆடிப்போன ரசிகர்கள் – அப்போ எப்பவுமே முரட்டு சிங்கிள்தானா?

- Advertisement -

சினிமா நடிகர்கள் நடிகைகளில் சிலர் திருமண வயது கடந்தும் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கின்றனர். சிலர் திருமணமே இல்லை என்ற முடிவை பல ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துவிட்டு முரட்டு சிங்கிளாக சினிமாவில் வலம் வருகின்றனர். 50 வயதுகளை கடந்துவிட்ட அவர்கள் இனி திருமணம் செய்து கொள்ள வாய்ப்பில்லை என்று ரசிகர்களும் அதை பற்றி யோசிப்பது இல்லை.

இப்போதைய நடிகர்களில் எஸ்ஜே சூர்யா நட்டி நடராஜன் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. அதே போல் திரிஷா அனுஷ்கா கௌசல்யா சித்தாரா பூணம் பஜ்வால் கிரண் ரத்தோர் கஜோல் கோவை சரளா சதா என பலர் திருமணம் வேண்டாம் என்ற முடிவில் இருக்கின்றனர். இதில் சிலர் 45 50 வயது கடந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அத்துடன் நடிகர்களில் சிம்பு விஷால் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் தொடர்கேள்வி எழுப்பி வரும் நிலையில் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை விரைவில் கரம் பிடிக்க இருக்கிறார். சிம்புவுக்கு அவரது பெற்றோர் தொடர்ந்து பெண் தேடி வருகின்றனர். அதே போல் இசையமைப்பாளர் அனிருத் வயது 35 கடந்த நிலையில் அவருக்கு திருமணம் எப்போது என்பதும் முக்கிய கேள்வியாக ரசிகர்களிடம் இருந்து வருகிறது.

இதற்கிடையே அனிருத்தின் அப்பா ரவி ராகவேந்தரிடம், உங்கள் மகன் அனிருத் திருமணம் எப்போது என்று சமீபத்தில் கேள்வி கேட்ட போது, எனக்கு தெரியலே உங்களுக்கு தெரிஞ்சா எனக்கு சொல்லுங்க, நானும் கல்யாணதுக்கு வருகிறேன் என்று கிண்டலாக கூறியிருந்தார். ஒரு அப்பாவாக இப்படி கிண்டலாக பேசுகிறாரே என்று பலரும் இதை கடுமையாக விமர்சித்தனர்.

- Advertisement -

சமீபத்தில் மதராஸி பட விழாவில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயனிடம், உங்களது நெருங்கிய நண்பர் அனிருத்தின் திருமணம் எப்போது என்று கேள்வி கேட்கப்பட்டது. ஏனெனில் அனிருத்துக்கு மிக நெருக்கமான 3 நண்பர்கள் நடிகர்கள் தனுஷ், சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் நெல்சன்தான். அவரது ஸ்டுடியோவுக்குள் இந்த 3 பேர் மட்டுமே மிக எளிதாக உள்ளே செல்ல முடியும். அந்தளவுக்குள் அவர்கர்களுக்குள் நெருக்கம் நீடிக்கிறது.

அதனால் அனிருத் திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் சிவகார்த்திகேயன் கூறியதாவது, பொதுவாக திருமணம் ஆனவர்களுக்கு இரவு 8 மணிக்கு மேல் எங்கே இருக்கீங்க என வீட்டிலிருந்து அழைப்பு வரும். ஆனால் அனிருத் தூங்கி எழுவதே இரவு 8 மணிக்கு தான். திருமணமா, ஹிட் பாடல்களா என்று வரும்போது அவருக்கு ஹிட் பாடல்கள் தான் முக்கியம். மற்றபடி முடிவு அவர் கையில் என்று கூறியிருக்கிறார். சிவகார்த்திகேயன் சொல்வதைப் பார்த்தால் அனிருத் இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை என்று உறுதியாக தெரிகிறது என்று ரசிகர்கள் புலம்புகின்றனர்.

- Advertisement -

சற்று முன்