- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியுடன் லோகேஷ் கனகராஜ் இணையும் இந்தத் திரைப்படமும் ஹாலிவுட் பட தழுவல் தானா... இதுக்கு அட்லி...

ரஜினியுடன் லோகேஷ் கனகராஜ் இணையும் இந்தத் திரைப்படமும் ஹாலிவுட் பட தழுவல் தானா… இதுக்கு அட்லி பரவாயில்லை போலயே…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது ஹை பீக்கில் உள்ள இயக்குனர் யார் என்றால் அது நிச்சயம் யோகேஷ் கனகராஜ் என்றுதான் சொல்ல வேண்டும். கேரளாவில் இன்று லியோ ஒளிபரப்பப்பட்ட திரையரங்கில் லோகேஷ் கனகராஜ் சென்றபோது கூடிய கூட்டத்தையே இதற்கு உதாரணமாக கூறலாம். அந்த அளவுக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை அவர் வைத்திருக்கிறார்.

இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் கனகராஜ் அறிமுகப்படுத்திய எல்சியூ கான்செப்ட்தான். தனது கைதி படத்தின் சில காட்சிகளை விக்ரமுடன் இணைத்து சபாஷ் போட வைத்தார் லோகேஷ் கனகராஜ். தமிழ் சினிமாவில் அதற்கு முன்பு இதேபோன்று காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், இந்தத் திரைப்படம் மூலம் தான் ரசிகர்களுக்கு அது ஒரு கொண்டாட்டமாக தெரிய ஆரம்பித்தது.

- Advertisement -

குறிப்பாக விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அறிமுகமான ரோலக்ஸ் கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்தது. இதனை கொண்டாடி தீர்த்த ரசிகர்கள், அடுத்த எல் சி யு திரைப்படம் எப்போது என்று அப்போதே கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.

இதற்கும் சென்ற இடங்களில் எல்லாம் பதில் கூறிய லோகேஷ் கனகராஜ், கைதி 2 மற்றும் விக்ரம் 2 படங்கள் நிச்சயமாக எடுக்கப்படும் என்று தெரிவித்து வந்தார். இதைத்தொடர்ந்து விஜய்யுடன் அவர் மீண்டும் இணைந்த லியோ திரைப்படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. படத்தின் ஷூட்டிங்கில் இருந்தே இது எல் சி யு-வில் இடம் பெறுமா என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர்.

- Advertisement -

கடந்த வாரம் படம் வெளியான நிலையில், அது எல் சி யு வில் வளைந்து நெளிந்து திணிக்கப்பட்டது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. அதேசமயம் படத்தின் டைட்டில் தொடங்கும் போதே இது ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் என்னும் ஹாலிவுட் படத்தின் மூலம்தான் உருவாக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அடுத்த படத்தை இயக்குகிறார்.

இந்தத் திரைப்படம் எல் சி யூ வில் இடம்பெறாது என்றும் அவர் கூறினார். இந்த நிலையில் தலைவருடன் அவர் இணையும் திரைப்படத்தையும் ஹாலிவுட் காவியத்திலிருந்து தான் எடுக்கிறார் என்று தகவல் வெளியாக இருக்கிறது. தி ஐரிஸ் மேன் என்னும் திரைப்படம் ஹாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரும் வெற்றியை பெற்றது. 2019 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. தற்போது இந்தப் படத்தைதான் அவர் கையில் எடுக்கப் போவதாக வெளியாகியிருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்