- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் கிங்காங் இல்லத்துக்கு நேரில் சென்ற பிரபல நடிகர் - மணமக்களுக்கு நேரில் வாழ்த்து!

நடிகர் கிங்காங் இல்லத்துக்கு நேரில் சென்ற பிரபல நடிகர் – மணமக்களுக்கு நேரில் வாழ்த்து!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக 35 ஆண்டுகளுக்கு மேலாக வலம் வந்துக்கொண்டு இருப்பவர் நடிகர் கிங்காங். ரஜினிகாந்த் நடித்த அதிசயப்பிறவி படத்தில் ஒரு நடனக்காட்சி மூலம் பிரபலமான நடிகர் கிங்காங் தொடர்ந்து காமெடி நடிப்பில் ரசிகர்களின் மனம் கவர்ந்தார். 53 வயதான அவர் தமிழ் தெலுங்கு கன்னடம் என பிற மொழிகளிலும் சேர்த்து 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

கடந்த வாரத்தில் நடிகர் கிங்காங் மகள் திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து திருமண வரவேற்பு விழாவும் நடந்தது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

- Advertisement -

ஆனால் நடிகர் கிங்காங் தனது மகள் திருமண அழைப்பிதழை பல முன்னணி நடிகர்களை நேரில் சந்தித்து தந்து அழைப்பு விடுத்தார். கன்னட நடிகர் சிவராஜ்குமார் துவங்கி பிரபுதேவா விஜய் சேதுபதி விஷால் கார்த்தி சிவகார்த்திகேயன் டி ராஜேந்தா் லதா ரஜினிகாந்த் வடிவேலு என பலருக்கும் நேரில் தந்து அழைத்தார்.

முத்துக்காளை பெஞ்சமின் மீசை ராஜேந்திரன் போன்ற சின்ன நடிகர்கள் மட்டுமே திருமண விழாவுக்கு வந்த நிலையில், பெரிய நடிகர்கள் யாருமே விழாவுக்கு வரவில்லை. இது இணையத்தில் வைரலானது. கிங்காங் போன்ற சின்ன நடிகர்களை திரைநட்சத்திரங்கள் தரும் மரியாதை லட்சணம் இதுதான் என்றும் ஆவேசமாக பலரும் திட்டினர்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான், வீடியோ ஒன்றை வெளியிட்டு மதுரையில் படப்பிடிப்பில் சிக்கிக்கொண்டேன். வரமுடியலை கிங்காங். மன்னிச்சிடுப்பா. சென்னைக்கு வந்ததும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்துகிறேன் என கூறியிருந்தார். நடிகர் வடிவேலு, ஒரு லட்சம் ரூபாய் மொய் பணத்தை தனது உதவியாளர்கள் மூலம் மணமக்களுக்காக கொடுத்தனுப்பி விட்டு, கிங்காங்கிடம் போனில் அழைத்து பேசியிருக்கிறார்.

இதையடுத்து தற்போது நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் கிங்காங் வீட்டுக்கே நேரில் சென்று மணமக்களை வாழ்த்தியிருக்கிறார். அன்பளிப்பும் செய்திருக்கிறார். கிங்காங்கின் மகள்கள் சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகர்கள் என்பதால், இல்லம் தேடி வந்து வாழ்த்து தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயனால் அவர்கள் பலத்த உற்சாகமடைந்தனர். அந்த வீடியோ புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்