- Advertisement -
Homeபொழுதுபோக்குடாஸ்மாக் கடைகளை மூடணும், குடிமக்களை குடிகார மக்களாக்கியது போதும் - மூத்த நடிகர் சிவக்குமார் ஆவேசம்!

டாஸ்மாக் கடைகளை மூடணும், குடிமக்களை குடிகார மக்களாக்கியது போதும் – மூத்த நடிகர் சிவக்குமார் ஆவேசம்!

- Advertisement -

தமிழக சட்டசபை தேர்தல் நேற்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. வழக்கமாக இதுவரை 78 சதவீதம் தான் அதிக ஓட்டுப்பதிவு என்ற சாதனை நீடித்த நிலையில் நேற்று அது முறியடிக்கப்பட்டது. தமிழகத்தில் முதன்முறையாக 85 சதவீதம் ஓட்டுகள் நேற்று பதிவாகின. பெரும்பாலான தொகுதிகளில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள் பதிவானது.

சென்னையில் பெரும்பாலான ஓட்டுசாவடிகளில் நடிகர்கள் நடிகைகள் இயக்குனர் இசையமைப்பாளர்கள் என கலைத்துறை சார்ந்தவர்கள் வந்து தங்களது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். அதே நேரத்தில் பல முக்கிய முன்னணி நடிகர்கள் நடிகைகள் இசையமைப்பாளர்கள் இந்த தேர்தலில் தங்களது ஜனநாயக கடமையை செய்யாமல் தவற விட்டதும் கவனிக்கத்தக்கது.

- Advertisement -

இந்த முறை வாக்கு சதவீதம் கணிசமாக அதிகரிக்க காரணம் ஆட்சி மாற்றம் தேவை என பெரும்பாலான மக்கள் கருதியதால் அதிகளவில் ஓட்டுகள் பதிவானதாக கூறப்படுகிறது. அதே போல் வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் லட்சக்கணக்கில் செலவு செய்து விமானத்தில் பயணித்து வந்து தங்களது ஓட்டுகளை பதிவு செய்ததும் வாக்கு பதிவு சதவீதம் அதிகரிக்க முக்கிய காரணமாக இருந்தது.

தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பிறகு இப்போது மூத்த கலைக்குடும்பமாக இருப்பது நடிகர் சிவக்குமார் குடும்பம்தான். நேற்று ஓட்டுச்சாவடிக்கு தனது மகன்கள் சூர்யா கார்த்தி மருமகள் ஜோதிகா உள்ளிட்ட குடும்பத்தினருடன் வந்த மூத்த நடிகர் சிவக்குமார் தனது வாக்கை செலுத்தினார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சிவக்குமார் கூறியதாவது, யார் ஆட்சிக்கு வந்தாலும் டாஸ்மாக் கடைகளை உடனே மூட வேண்டும்.

- Advertisement -

குடிமக்களைக் குடிகார மக்களாக்கியது போதும். தன் குடும்பத்தோடு கோடி கோடியாக சொத்துக்களைக் குவிக்காமல், கடைக்கோடி மனுஷன் வாழ்க்கையில ஒளியேற்ற வேண்டும். இதுதான் என்னுடைய வேண்டுகோள். இதை இன்றைக்கு மட்டும் சொல்லவில்லை. கலைஞர் கருணாநிதியிடம் தொடக்கம் முதல் இதனை வலியுறுத்தி வருகிறேன்.

அப்போதிருந்துதான் நான் மதுவுக்கு எதிரானவன் தான். ஆனா, ஆட்சிக்கு வருகிறவர்கள் அதைச் செய்வார்களா எனத் தெரியவில்லை. ஆனால், அதை செய்தால் ரொம்பவே மகிழ்ச்சியடைவேன். கிட்டத்தட்ட 40 சதவிகித மக்கள் மதுவினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று நடிகர் சிவக்குமார் ஆவேசமாக கூறினார்.

- Advertisement -

சற்று முன்