- Advertisement -
Homeபொழுதுபோக்குகல்லூரியில் படித்த போது சூர்யா செய்த அந்த விஷயம், பல ஆண்டுகளுக்கு பின் மேடையில் உண்மையை...

கல்லூரியில் படித்த போது சூர்யா செய்த அந்த விஷயம், பல ஆண்டுகளுக்கு பின் மேடையில் உண்மையை போட்டுடைத்த அப்பா சிவக்குமார் – கங்குவா விழாவில் அப்செட் ஆன நடிகர் சூர்யா!

- Advertisement -

தமிழ் சினிமாவில் சீனியர் நடிகர் சிவக்குமார். இவருக்கு திரையுலாக மார்கண்டேயன் என்ற பட்ட பெயரும் உண்டு. இதற்கு காரணம் வழக்கமாக சினிமா நடிகர்கள் என்றாலே மது அருந்துதல், புகைப்பிடித்தல் போன்ற தவறான பழக்கங்கள் இருக்கும். தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் நெருக்கமான நட்பு கொண்டிருப்பார்கள்.

ஆனால் நடிகர் சிவக்குமாரை பொறுத்தவரை நூற்றுக்கணக்கான படங்களில் நடித்தும் அவர் மதுப்பழக்கம், புகைப்பழக்கம், நடிகைகளுடன் தொடர்பு, கிசுகிசு என்ற எதிலும் சிக்காமல் மிகவும் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதால் அவருக்கு திரையுலக மார்க்கண்டேயன் என்ற பட்டப் பெயர் உண்டு. கோவை மாவட்டம் சூலூர், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சிவகுமார் இளம் வயதில், கணவரை இழந்த தன் தாயாருடன் மிகவும் கஷ்டப்பட்டு வளர்ந்தவர். படித்தவர்.

- Advertisement -

இளம் வயதில் சினிமா ஆசையால் சென்னைக்கு வந்த சிவக்குமார், படிப்படியாக முன்னுக்கு வந்தார். எம்ஜிஆர் சிவாஜி போன்ற ஜாம்பவான் நடிகர்களுடன் இணைந்து நடித்தவர். அந்த காலகட்டத்தில் முருகன் வேடம் என்றாலே அந்த கேரக்டரில் சிவக்குமார் நடிக்கும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெயர் பெற்றவர். துவக்கத்தில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்த சிவக்குமார், பிறகு கதாநாயகனாக பல படங்களில் நடித்தார்.

குறிப்பிட்ட வயதுக்கு பிறகு அப்பா, அண்ணன் போன்ற கேரக்டரிலும் சிவக்குமார் நடித்து வந்தார். சித்தி, அண்ணாமலை போன்ற டிவி சீரியல்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கடந்த 15 ஆண்டுகளாக சிவக்குமார் சினிமா, சீரியல் என எதிலும் நடிக்காமல் நடிப்பை விட்டு முற்றிலும் விலகி இருக்கிறார். அவரது இரண்டு மகன்கள் சூர்யா, கார்த்தி இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகர்களாக இருக்கின்றனர்.

- Advertisement -

கடந்த சனிக்கிழமையன்று இரவு கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை இண்டோர் ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த விழாவில் கங்குவா படக்குழுவினர் மற்றும் நடிகர் சூர்யா, அவரது தம்பி கார்த்தி, தந்தை சிவக்குமார் உட்பட குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் சிவக்குமார் பேசுகையில், சில சுவாரசியமான விஷயங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது மேடையில் சிவக்குமார் பேசுகையில், சூர்யாவுக்கு லயோலா கல்லூரியில் பி காம் படிக்க விண்ணப்பிக்க சென்றபோது இடமில்லை என்று சொல்லிவிட்டார்கள். அதன் பின் நான் சென்று என்ன பிரச்சனை என்று பிரின்ஸ்பாலை நேரில் சந்தித்து கேட்டேன்.

அப்போது அவர், சில பிரபலங்களின் மகன்கள் இங்கு படித்தார்கள். ஆனால் படிப்பை பாதியிலேயே விட்டுச் சென்று விட்டார்கள். அதேபோல் உங்கள் மகனும் செய்வார் என்றார். நான் கண்டிப்பாக என் பையன் அவ்வாறு செய்ய மாட்டான் என்றேன். ஆனால் சூர்யா கடைசி ஆண்டில் 4 அரியர் வைத்திருந்தார் என்று கூறினார். இதைக் கேட்டதும் நடிகர் சூர்யா, அய்யய்யோ என தன் தலையில் கை வைத்துக்கொண்டார். இப்படி கல்லூரியில் நடந்த அரியர் வைத்த விஷயத்தை ரசிகர்கள் முன்னிலையில் அப்பா போட்டு உடைத்து விட்டாரே என்று சிறிது நேரம் அப்செட் ஆகிவிட்டார்.

- Advertisement -

சற்று முன்