- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் படத்தில் நடித்ததால் என் மனைவியிடம் அசிங்கப்பட்டு விட்டேன், அப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டாரே? -...

ஜெயிலர் படத்தில் நடித்ததால் என் மனைவியிடம் அசிங்கப்பட்டு விட்டேன், அப்படி ஒரு கேள்வியை கேட்டுட்டாரே? – ஆதங்கப்பட்ட நடிகர் சிவராஜ்குமார்!

- Advertisement -

கன்னட மொழி சினிமாவில் சூப்பர் ஸ்டராக கொண்டாடப்படுபவர் நடிகர் சிவராஜ்குமார். பல சூப்பர் ஹிட் படங்களை தந்திருக்கிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் சிவராஜ்குமார் நடித்திருந்தார். அவரது நடிப்பை பெரிய அளவில் ரசிகர்கள் வரவேற்று கொண்டாடினர்.

ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினியின் நண்பராக சிவராஜ்குமார் நடித்திருப்பார். ரஜினி அவரை சந்தித்து, வில்லன்களை சமாளிக்க உதவி கேட்பார். தனது அடியாட்களை அவருடன் சிவராஜ்குமார் அனுப்பி வைப்பார். படத்தின் கிளைமாக்ஸில் வில்லன் ஆட்களிடம் தன் மனைவி, மருமகள் சிக்கிய நிலையில் அங்கு வரும் சிவராஜ்குமார் டிஸ்யூ பேப்பர் பாக்ஸை வைத்துவிட்டு சுருட்டு பிடிப்பார். இந்த காட்சி செம மாஸ் ஆக இருந்து ரசிகர்கள் கொண்டாடினர்.

- Advertisement -

ஜெயிலர் படத்துக்கு பிறகு இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்திலும் சிவராஜ்குமார் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிவராஜ்குமார், அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்ற நிலையில் குணமடைந்தார். இப்போது பெங்களூரு திரும்பி ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் சிவராஜ்குமார் கூறியதாவது, ஜெயிலர் படத்தைப் பார்த்த என்னுடைய மனைவி என்னிடம் பேசும்போது, அப்படி அந்த படத்தில் என்னதான் செய்தீர்கள்? சிகரெட்டை பிடித்தவாறு அந்த பக்கம் இந்த பக்கம் நடந்திருப்பீர்கள். டிஸ்யூ பாக்ஸை தூக்கி வீசி எறிவீர்கள். இதற்கு இப்படி ஒரு வரவேற்பா? என்று என்னைப் பார்த்து கேட்டு விட்டார்.

- Advertisement -

அவர் அப்படி சொன்னபோது எனக்கும் அப்படித்தான் ஆச்சரியமாக இருந்தது. அந்த படத்தில் நான் நடிச்சது சின்ன ரோல் தான். ஆனால் இந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு டிஷ்யூ பாக்ஸ் இந்த அளவுக்கு ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கவில்லை.

என்னை மாஸாக காட்டியதற்கு கேமரா மேனுக்கு நன்றி. நான் வரும் சீன்களில் பிஜிஎம் போட்டு அசத்திய இசையமைப்பாளர் அனிருத் மற்றும் இயக்குனர் நெல்சன் ஆகியோருக்கும் தான் நான் நன்றி சொல்ல வேண்டும் என்று நடிகர் சிவராஜ்குமார் கூறியிருக்கிறார். இப்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், இந்த படத்திலும் சிவராஜ்குமார் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்