- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னை பற்றி அவதூறு பரப்பினால்…. ஏ ஆர் ரகுமான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை - இசைப்புயல்...

என்னை பற்றி அவதூறு பரப்பினால்…. ஏ ஆர் ரகுமான் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை – இசைப்புயல் கடைசியில் இப்படி ஆவேச புயலாக மாறிட்டாரே?

- Advertisement -

இசைத்துறையில் உச்சம் பெற்ற ஒரு பிரபல இசையமைப்பாளராக இருப்பவர் ஏ ஆர் ரகுமான். இசைப்புயல் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஏஆர் ரகுமான், கடந்த 1992ம் ஆண்டில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவரது சின்ன சின்ன ஆசை பாடலுக்கு தேசிய விருது கிடைத்தது.

தொடர்ந்து தமிழில் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்த ஏஆர் ரகுமான் தெலுங்கு, இந்தி என பிறமொழி படங்களுக்கும் இசையமைத்து உலகளவில் பிரபலமடைந்தார். அவரது இசையில் உருவான ஜெய் ஹோ பாடலுக்கு ஆஸ்கர் விருதும் கிடைத்தது. இதுவரை 7 முறை மத்திய அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருதை வென்றவர் ஏஆர் ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கடந்த 1995ம் ஆண்டில் சாயிரா பானு என்பவரை ஏஆர் ரகுமான் திருமணம் செய்துக்கொண்டார். கதீஜா, ரஹிமா என்ற 2 மகள்களும் அமீன் என்ற மகனும் இருக்கிறார். இதில் கதீஜாவுக்கு 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மற்ற 2 பிள்கைளும் திருமணத்துக்கு தயாராக உள்ள நிலையில், சில தினங்களுக்கு முன் சாயிரா பானு, தனது கணவர் ஏஆர் ரகுமானை பிரிவதாக அறிவித்தார்.

அடுத்த ஆண்டு தங்களது 30வது திருமண ஆண்டை கொண்டாட வேண்டிய நிலையில், இப்போது ஏஆர் ரகுமானை பிரிவதாக அவரது மனைவி சாயிரா பானு அறிவித்தது, ரசிகர்கள் மத்தியிலும் தமிழ் சினிமா வட்டாரத்திலும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு பதிலளித்த ஏஆர் ரகுமானும், உடைந்த இதயங்களின் கனத்தால் கடவுளின் சிம்மாசனம் கூட நடுங்கி விடும். இந்த முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில், ஏஆர் ரகுமான் இசைக்குழுவில் உள்ள கிடார் இசை பெண் கலைஞர் மோனிகா டே என்பவரும், தன் கணவர் மார்க் என்பவரை பிரிவதாக அறிவித்திருந்தார். சாயிரா பானு, ஏஆர் ரகுமான் பிரிவு நேரத்தில் மோனிகா டே செய்த பதிவால், ஏஆர் ரகுமான், மோனிகா டே குறித்து பலரும் சர்ச்சையை கிளப்பி விட்டனர். யூடியூப்களில் சிலர் அவர்களை இணைத்தும் பேச துவங்கி விட்டனர்.

இதுகுறித்து தற்போது ஏஆர் ரகுமானின் வக்கீல் நர்மதா சம்பத், சில யூடியூபர்களுக்கும், சம்பந்தப்பட்ட சமூக வலைதளங்களுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவலுடன் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள், சிலர் கற்பனையில் அளித்த பேட்டிகள் போன்ற அவதூறு வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அவதூறு கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை நீக்காவிட்டால் 2 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்க வழி செய்யும் சட்டப்பிரிவுகளின் கீழ் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்