- Advertisement -
Homeபொழுதுபோக்குஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் நடிக்க கண்டிஷன் போட்ட சித்தார்த், ஆள் பலே கில்லாடியா இருக்காரே? -...

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் படத்தில் நடிக்க கண்டிஷன் போட்ட சித்தார்த், ஆள் பலே கில்லாடியா இருக்காரே? – லால் சலாம் படத்தை பார்த்துட்டாரோ…

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா. நடிகர் தனுஷ் மனைவி. 17 ஆண்டுகளாக இருவரும் குடும்பம் நடத்திய நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். தனுஷ் சினிமாவில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். அதே போல் ஐஸ்வர்யாவும், படங்களை டைரக்ட் செய்வதில் ஆர்வமாக இருக்கிறார்.

நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவன் இயக்கிய படங்களில், உதவி இயக்குநராக பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். அவரிடம் டைரக்‌ஷன் கத்துக்கொண்ட ஐஸ்வர்யா, தனது நடிகர் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த 3 படத்தை இயக்கினார். அந்த படத்தில் சிவகார்த்திகேயன், பிரபு போன்றவர்களும் நடித்திருந்தனர். ஆனால் படம் மாபெரும் பிளாப் ஆனது.

- Advertisement -

அதைத்தொடர்ந்து கௌதம் கார்த்திக் நடித்த வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா. அந்த படமும் சரியாக போகவில்லை. 2வது படமும் தோல்வியடைந்த நிலையில், படங்கள் டைரக்ட் செய்வதை சற்று நிறுத்தி வைத்திருந்தார். இப்போது கணவரை பிரிந்த நிலையில் படங்களை இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்த லால் சலாம் என்ற படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இரட்டை நாயகர்களாக நடித்திருந்தனர். லைகா புரடக்சன் தயாரித்த இந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 3, வை ராஜா வை படங்களின் வரிசையில், லால் சலாம் படமும் பிளாப் படமாக தோல்வியை தழுவியது.

- Advertisement -

எனினும் தன் முயற்சியில் சிறிதும் மனம் தளராத விக்ரமாதித்யன் போல, லால் சலாம் தந்த தோல்வியை சகித்துக்கொண்ட ஐஸ்வர்யா, மீண்டும் படம் டைரக்டர் செய்ய தயாராகி விட்டார். இந்த முறை இவரது படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பவர் நடிகர் சித்தார்த். அவரும் ஐஸ்வர்யா டைரக்ட் செய்யும் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இந்த படத்தை தயாரிக்கும் நிறுவனம் இன்னும் முடிவாகவில்லை. இதற்கிடையே இந்த படத்தின் பவுண்டர் ஸ்கிரிப், அதாவது படத்தின் முழுக்கதை ஸ்கிரிப்ட்டையும் என்னிடம் தர வேண்டும் என்று இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திடம் சித்தார்த் கண்டிசன் போட்டிருக்கிறார். அதற்கு ஒத்துக்கொண்ட ஐஸ்வர்யா, ஸ்கிரிப்ட் தயார் செய்து கொண்டு வந்து தருவதாக கூறியிருக்கிறார். அதை படித்து பார்த்த பிறகே, தன் முடிவை சொல்ல இருக்கிறார் சித்தார்த்.

- Advertisement -

சற்று முன்