- Advertisement -
Homeபொழுதுபோக்குஅவருக்கு வில்லனாக ஒரு படத்தில் நான் நடிக்கணும், நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா இப்படி ஆசைப்பட்டு...

அவருக்கு வில்லனாக ஒரு படத்தில் நான் நடிக்கணும், நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா இப்படி ஆசைப்பட்டு சொன்னது யாரை தெரியுமா? – போடு வெடிய, அது நடந்தா தரமான சம்பவம்தான்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் நடிகர் எஸ்ஜே சூர்யா. அவர் இயக்கத்தில் முதலில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற படம் வாலி. நடிகர் அஜீத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த இந்த படத்தை எஸ்ஜே சூர்யா டைரக்ட் செய்திருந்தார். சிம்ரன் அஜீத்குமாருக்கு ஜோடியாகவும், ஜோதிகா கேமியோ ரோலிலும் இந்த படத்தில் நடித்திருந்தார்.

வேலை இல்லாத பட்டதாரி இளைஞராக, காமெடி ரோலில் நடிகர் விவேக் நடித்திருந்தார். நடிகர் அஜீத்குமார், நடிகைகள் சிம்ரன், ஜோதிகா, நடிகர் விவேக் மற்றும் இயக்குனர் எஸ்ஜே சூர்யா என 5 பேருக்குமே இந்த படம் அவர்களது சினிமா பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.

- Advertisement -

அடுத்து நடிகர் விஜய் – ஜோதிகா நடிப்பில், எஸ்ஜே சூர்யா இயக்கிய படம் குஷி. இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றிப் படமாக அமைந்தது. காதலர்களுக்குள் ஏற்படும் ஈகோ பிரச்னையை மையப்படுத்தி, இந்த படத்தின் கதையை அழகாக சொல்லியிருப்பார் எஸ்ஜே சூர்யா. இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. விவேக் காமெடி இந்த படத்திலும் ரசிகர்களை மிகவும் ரசிக்க வைத்தது.

தொடர்ந்து நியூ, அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்த எஸ்ஜே சூர்யா, 10 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிப்பில் ரசிகர்களை அசத்தி வருகிறார். இறைவி, இசை, மாநாடு, மான்ஸ்டர், மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என நடிப்பு அரக்கனாக வலம் வந்துக்கொண்டு இருக்கிறார். பல முக்கிய படங்களில் இப்போது பிஸியாக நடித்து வருகிறார்.

- Advertisement -

இப்போது பெரிய அளவில் வில்லன் கேரக்டர்களில் அசத்திக்கொண்டு இருக்கும் நடிகர் எஸ்ஜே சூர்யா, ஆரம்பகாலத்தில் சினிமாவில் நுழைந்த போது மிகவும் கஷ்டப்பட்டவர். ஓட்டலில் சர்வர் வேலை செய்தவர். நல்ல காலணி கூட இல்லாமல் இருந்தவர். அவரிடம் நல்ல ஆடைகள் கூட இருந்ததில்லை என அவரே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

அப்படிப்பட்ட எஸ்ஜே சூர்யாவுக்கு, வாலி என்ற அவரது படத்தில் நடிக்க சம்மதித்து, அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை தந்தவர் நடிகர் அஜீத்குமார்தான். அவர் குறித்து எஸ்ஜே சூர்யா கூறுகையில், என் அப்பா அம்மா பிறகுக்கு எனக்கு எல்லாமே அஜீத்குமார்தான். நான் இப்போது வாழுகிற இந்த ஆடம்பர வாழ்க்கை அவர் கொடுத்ததுதான். மீண்டும் அவரை வைத்து படம் எடுக்கும் ஆசை எனக்கு இல்லை. ஆனால் அவருக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது, என்று எஸ்ஜே சூர்யா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்