- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமா நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குறித்து ஆவேசமாக பேசிய நடிகர் அரவிந்த் சாமி, என்...

சினிமா நடிகர்களின் ரசிகர் மன்றங்கள் குறித்து ஆவேசமாக பேசிய நடிகர் அரவிந்த் சாமி, என் மகனாக இருந்தாலும் அப்படிதான் சொல்வேன் என்கிறாரே? – மிரண்டு போன ரசிகர்கள்

- Advertisement -

கடந்த 1990களில் பெண் வீட்டார் மாப்பிள்ளை தேடும்போது அரவிந்த் சாமி போல மாப்பிள்ளை அழகாக இருந்தால் பாருங்கள் என்று சொல்வது வழக்கமாக இருந்தது. ஏனென்றால் அன்றைய காலகட்டத்தில் ஆணழகன்களாக இருந்த நடிகர்கள் அரவிந்த்சாமி, பிரசாந்த், அஜீத்குமார் போன்றவர்கள்தான்.

தமிழ் சினிமாவில் அப்படி ஒரு அழகான நடிகராக அசத்தியவர் நடிகர் அரவிந்தசாமி. அவர் நடிப்பில் வெளிவந்த ரோஜா, மின்சார கனவு, பம்பாய் போன்ற படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெற்றன. இப்போதும் நடிகர் அரவிந்தசாமி வில்லன் கேரக்டரில் நடித்து அசத்திக் கொண்டிருக்கிறார். குறிப்பாக தனி ஒருவன், போகன் போன்ற படங்களில் அரவிந்த் சாமியின் மிரட்டலான நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

- Advertisement -

வெங்கட் பிரபு இயக்கத்தில், 3 ஆண்டுகளுக்கு முன் வெளியாகி பெரிய அளவில் வெற்றி பெற்ற மாநாடு படத்தில், எஸ் ஜே சூர்யா நடித்த போலீஸ் அதிகாரி வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் அரவிந்த் சாமிதான். இயக்குனர் வெங்கட் பிரபு அவரைத்தான் முதலில் அந்த கேரக்டரில் நடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.ஆனால் அப்போது கால்ஷீட் இல்லாத காரணத்தால் அந்த படத்தில் அரவிந்த் சாமியால் நடிக்க முடியாமல் போனது.

இந்நிலையில் தற்போது இயக்குனர் 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள மெய்யழகன் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிகர் அரவிந்த் சாமி நடித்துள்ளார். இந்த படம் கார்த்தியின் 27வது படம். சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

- Advertisement -

இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது. வருகிற 27ம் தேதி மெய்யழகன் படம் ரிலீஸ் ஆகிறது. அதனால் இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து நடிகர் கார்த்தி, நடிகர் அரவிந்த்சாமி பங்கேற்று வருகின்றனர்.
சமீபத்தில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் அரவிந்த்சாமியிடம் நடிகர் ரசிகர் மன்றங்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த நடிகர் அரவிந்த் சாமி, எனக்கு ரசிகர் மன்றம் தொடங்கி என்ன செய்யப் போகிறார்கள். ரசிகர்களுக்கு அது பயனுள்ளதாக இருக்குமா? நான் சினிமாவை விட்டு விலகினால், அவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்விகள் எனக்குள் உண்டு. என் மகன் ஒரு நடிகரின் ரசிகர் மன்றத்தில் சேர வேண்டும் என்று சொன்னால், நான் அதை ஊக்குவிக்க மாட்டேன். அப்படி இருக்கும் பட்சத்தில் என் மகனுக்கு ஒரு அட்வைஸ் ஊரார் மகனுக்கு ஒரு அட்வைஸ் என நான் எப்படி சொல்ல முடியும் என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்