- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் இயக்குனராக களத்தில் குதிக்க தயாராகும் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா, அந்த சப்ஜெக்ட்டை ...

மீண்டும் இயக்குனராக களத்தில் குதிக்க தயாராகும் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா, அந்த சப்ஜெக்ட்டை கையில் எடுக்க ஆசை – தரமான சம்பவம்தான்… கொண்டாடுங்கடே…

- Advertisement -

நடிகர் எஸ்ஜே சூர்யா, தமிழ் சினிமாவில் வில்லன் நடிப்பில் கோலோச்சி வருகிறார். மாநாடு படம் தந்த அசுர வெற்றிக்கு பிறகு மார்க் ஆண்டனி படத்தில் வில்லன் கேரக்டரில் ரசிகர்களை மிரட்டினார். தொடர்ந்து ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்தார். இப்போது இந்தியன் 2, ராயன் என தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் படங்களிலும் எஸ்ஜே சூர்யாவுக்கு நடிக்க அதிகளவில் வாய்ப்புகள் வருகின்றன. சமீபத்தில் இந்தியில் ஷாருக்கான் நடிக்கும் தி கிங் என்ற படத்திலும் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் தொடர்ந்து 45 நாட்கள் முதல் 50 நாட்கள் வரை கால்ஷீட் கேட்பதால் ஷாருக்கான் படத்தில் எஸ்ஜே சூர்யா நடிப்பது கேள்விக்குறியாக உள்ளது.

- Advertisement -

எஸ்ஜே சூர்யாவை பொருத்தவரை ஆரம்பத்தில் தமிழ் சினிமாவுக்குள் இயக்குனராக வந்தவர். அஜீத்குமார் நடித்த வாலி படத்தையும், விஜய் நடித்த குஷி படத்தையும் இயக்கியவர். இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. இந்த படங்கள் அஜீத்குமார், விஜய் இருவருக்குமே அவர்களது திரை பயணத்தில் பெரிய திருப்புமுனையாக அமைந்தன.

எஸ்ஜே சூர்யா படங்களில் தொடர்ந்து வில்லனாக நடித்துக்கொண்டு இருந்தாலும் அவருக்குள் இருக்கும் இயக்குனர் அவ்வப்போது எட்டிப் பார்த்து அவரை படங்களை இயக்கும்படி தூண்டியபடிதான் இருக்கிறார். அதனால் படம் இயக்குவது குறித்த ஆர்வமும் எஸ்ஜே சூர்யாவுக்கு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில், சமீபத்தில் நானி நடித்துள்ள சூர்யாஸ் சாட்டர்டே என்ற படத்தின் பிரமோ நிகழ்ச்சி நடந்தது. இதில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இந்த படத்தில் வில்லன் கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற எஸ்ஜே சூர்யா, தனது விருப்பத்தை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் எஸ்ஜே சூர்யா, நான் குஷி படத்தின் 2ம் பாகம் கதையை, பவன் கல்யாணிடம் கூறினேன். அவருக்கு கதை மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் இப்போதைக்கு காதல் கதையில் நடிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார். அந்த கதையை இயக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. விஜய், நானி, ராம்சரண் ஆகிய 3 பேரில் யாரும் இந்த கதையில் நடிக்க பொருத்தமாக இருப்பார்கள். இந்த படத்தில் நாயகியாக நடிக்க பிரியங்கா மோகன் மிகவும் பொருத்தமாக இருப்பார் என்றும் எஸ்ஜே சூர்யா கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்