- Advertisement -
மும்பையில் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மும்பை மாநகராட்சி அலுவலகத்திற்கு ஸ்மித் ஜான்சன் என்ற பெயரில் மின்னஞ்சல் வந்தது. அதில் வருகிற 31ம் தேதி மும்பை ஜூகில் உள்ள நடிகர் அமிதாப் பச்சனின் ஜல்சா பங்களா மீது கையெறி குண்டு தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டல் விடப்பட்டுள்ளது. மேலும் வருகிற நவம்பர் 27ம் தேதி மகாலட்சுமி ரேஸ்கோர்ஸ்சில் நடைபெற உள்ள பாடகர் தில்ஜித் தோசஞ்ச் இசை நிகழ்ச்சியில் தற்கொலை படை தாக்குதல் நடத்தப்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.





