- Advertisement -
Homeபொழுதுபோக்குசினிமாவில் முக்கிய இடத்தை தவறவிட்ட நடிகர் ஸ்ரீகாந்த்… போதை பொருள் வழக்கில் கைதான சோகம் -...

சினிமாவில் முக்கிய இடத்தை தவறவிட்ட நடிகர் ஸ்ரீகாந்த்… போதை பொருள் வழக்கில் கைதான சோகம் – குற்றம் உறுதியானால் என்ன தண்டனை தெரியுமா?

- Advertisement -

இயக்குனர் சசி இயக்கி ரோஜாக்கூட்டம் படத்தில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். கதாநாயகியாக பூமிகா நடித்திருந்தார். முதல் படமே நடிகர் ஸ்ரீகாந்துக்கு நல்ல அடையாளத்தை அறிமுகத்தை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் பார்த்திபன் கனவு போஸ் வர்ணஜாலம் கனா கண்டேன் மெர்க்குரி பூக்கள் நண்பன் என பல படங்களில் ஸ்ரீகாந்த் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார்.

அழகான இளமையான தோற்றமும் வசீகரமாக முகமும் நடிப்பாற்றலும் கொண்ட நடிகர் ஸ்ரீகாந்த் தொடர்ந்து தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தை பிடித்திருக்க வேண்டும். ஆனால் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிக்காமல் தவற விட்டதும், பல வெற்றிப் படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை நழுவ விட்டதும் அவரது சினிமா வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியது.

- Advertisement -

குறிப்பாக தனது படங்கள் கால்ஷீட் குறித்த விவரங்களை கவனிக்க நடிகர் ஸ்ரீகாந்த் தனது நெருங்கிய உறவினர் ஒருவரை நியமித்திருக்கிறார். அவர் நல்ல படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை எல்லாம் கெடுத்து, அந்த படங்களை தவற விட்டதே ஸ்ரீகாந்தின் சினிமா வாழ்க்கைக்கு மிகப்பெரிய சறுக்கலாக மாறிவிட்டது. சமீபத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் இதை ஒரு நேர்காணலில் வெளிப்படையே கூறியிருந்தார்.

சினிமாவில் போதிய வாய்ப்புகள் இல்லாமல் சமீபத்தில் வெப் சீரிஸ்களில் நடிக்க ஸ்ரீகாந்த் முயற்சிகளை மேற்கொண்டார். ஒரு வெப்சீரிஸில் போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தார். இந்நிலையில் அவர் நேற்று போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது கோலிவுட் வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

அதிமுக ஐடி விங்க் சார்ந்த முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், போலீசார் அவரிடம் நடத்திய போதைப் பொருள் பயன்படுத்தியது தெரிய வந்தது. அவர் நடிகர் ஸ்ரீகாந்த் நடிக்கும் தீக்கிரை என்ற படத்தின் 3 தயாரிப்பாளர்களில் ஒருவர் என்பதும் அவர் மூலம் நடிகர் ஸ்ரீகாந்த் கொகைன் போதைப் பொருள் வாங்கி பயன்படுத்தியதும் போலீஸ் விசாரணையில் உறுதியானது.

இந்நிலையில் போலீசார் நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடத்தினர். மருத்துவ பரிசோதனையில் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த குற்றம் நீதிமன்றத்தில் உறுதியாகும் பட்சத்தில் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் பயன்படுத்திதற்காக நடிகர் ஸ்ரீகாந்துக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்