- Advertisement -
Homeபொழுதுபோக்குதோற்றுப்போன என் சினிமா வாழ்க்கை; நான் ஜெயிக்க முடியாமல் போனதற்கு அவர்தான் காரணம் - ஆதங்கப்பட்டு...

தோற்றுப்போன என் சினிமா வாழ்க்கை; நான் ஜெயிக்க முடியாமல் போனதற்கு அவர்தான் காரணம் – ஆதங்கப்பட்டு பேசிய நடிகர் ஸ்ரீகாந்த்!

- Advertisement -

சினிமாவை பொருத்த வரை அழகு, நடிப்பு திறமை இருந்தாலும் கிடைக்கிற வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வதில்தான் வெற்றியின் ரகசியம் அடங்கியிருக்கிறது. சீமராஜா படத்தில் 40 விநாடி காட்சிக்காக சிக்ஸ் பேக் வைக்காமல் இருந்தால் சூரிக்கு விடுதலை படத்தில் ஹீரோ வாய்ப்பு கிடைத்திருக்காது.

இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தில் நடிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட நடிகர் சூர்யா, ஒரு மாஸ் வெற்றிப் படத்தை இழந்திருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் அவர் நடிக்க மறுத்த புறநானூறு படம் அடுத்து 1965 என்ற பெயரில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிறது. அதர்வா ஜெயம் ரவி ஸ்ரீலீலா நடிக்கும் இந்த படம் இப்போதே ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.

இப்படி தேடி வரும் நல்ல வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்வதும், தானாக அமைந்த நல்ல வாய்ப்பை நிராகரித்து ஏமாறுவதும் தமிழ் சினிமா கலைஞர்களின் வாழ்வில் நடந்துக்கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் முன்னணி நடிகராக வந்திருக்க வேண்டிய நடிகர் ஸ்ரீகாந்த் இப்போது பட வாய்ப்புகளின்றி போயிருக்கிறார். வெப் சீரிஸ்களில் நடிக்கிறார்.

சசி இயக்கத்தில் ரோஜா கூட்டம் படத்தில் அறிமுகமான ஸ்ரீகாந்த் ஏப்ரல் மாதத்தில் போஸ் மெர்க்குரி பூக்கள் பார்த்திபன் கனவு ஜூட் போஸ் கனா கண்டேன் பம்பர கண்ணாலே கனா கண்டேன் வர்ணஜாலம் உயிர் சதுரங்கம் நண்பன் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தும் பெரிய அளவில் அவரை தமிழ் சினிமா கொண்டாடவில்லை.

இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் நடிகர் ஸ்ரீகாந்த் கூறியதாவது, நான் நடிக்க வேண்டிய படங்கள், கால்ஷீட் விஷயங்களை கவனித்துக்கொள்ள என்னுடைய சித்தப்பாவை எனக்கு மேனேஜராக வைத்திருந்தேன். ஆனால் அவர் மணிரத்னம் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை கெடுத்து விட்டார்.

அதே போல் அன்பே சிவம் படத்துக்கு பிறகு இயக்குனர் சுந்தர் சி எனக்கு ஒரு கதை சொல்ல நினைச்சிருக்கார். அப்போது, என்கிட்ட முதலில் கதை சொல்லுங்க, எனக்கு பிடிச்சிருந்தா ஸ்ரீகாந்த் நடிப்பார்ன்னு அவர்கிட்ட சொல்லிட்டார். இதெல்லாம் ரொம்ப வருஷம் கழிச்சுதான் எனக்கு தெரிந்தது. அதுக்கு அப்புறம்தான் குடும்பத்துல யாரையும் வேலைக்கு வெச்சுக்க கூடாதுன்னு புரிஞ்சுக்கிட்டேன் என்று ஸ்ரீகாந்த் வருத்தப்பட்டு கூறியிருக்கிறார்.

சற்று முன்