- Advertisement -
Homeபொழுதுபோக்கு22 வருஷத்துக்கு முன்னாடி, வெறுங்கையோட சென்னைக்கு வந்த சூரியை இன்னும் நான் மறக்கலே - நெகிழ்ச்சியோடு...

22 வருஷத்துக்கு முன்னாடி, வெறுங்கையோட சென்னைக்கு வந்த சூரியை இன்னும் நான் மறக்கலே – நெகிழ்ச்சியோடு வீடியோ வெளியிட்ட நடிகர் சூரி

- Advertisement -

நடிகர் சூரி, தமிழ் சினிமாவில் இப்போதைக்கு அதிக வசூலை தரும் ஒரு முன்னணி நாயகனாக மாறி இருக்கிறார். சமீபத்தில் சூரி நடிப்பில் வெளியான கருடன் படம், தமிழகத்தில் மட்டும் ரூ. 23 கோடியும், உலகம் முழுவதும் ரூ. 30 கோடியும் வசூலித்துள்ளது. இந்த வார இறுதிக்குள் இந்த படத்தின் வசூல் 40 கோடி ரூபாயை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சூரியை பொறுத்தவரை ஆரம்பத்தில் துணை நடிகராக வசனமோ, கேரக்டரோ இல்லாமல் சில படங்களில் தோன்றியவர். பிறகு பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் படத்தில் ஓரிரு காட்சிகளில் வசனங்களை பேசி நடித்தார். எழில் இயக்கிய தீபாவளி படத்திலும், சில காட்சிகளில் சூரி நடித்திருப்பார்.

- Advertisement -

வெண்ணிலா கபடிக்குழு, அழகர்சாமியின் குதிரை, குள்ளநரிக்கூட்டம் போன்ற படங்களில் நடித்த பிறகுதான், சூரியின் அடையாளமே ரசிகர்களுக்கு தெரிய ஆரம்பித்தது. பிறகு, அவருக்கான காமெடி காட்சிகள் உருவாக்கப்பட்டன. குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், மனம் கொத்திப் பறவை, சீமராஜா, நம்ம வீட்டுப்பிள்ளை போன்ற படங்கள் பெரிய அளவில் கை கொடுத்தன.

முன்னணி காமெடி நடிகராக உருவான சூரியை, திடீரென விடுதலை படத்தில் கான்ஸ்டபிள் குமரேசன் கேரக்டரில் நடிக்க வைத்து ஹீரோவாக்கினார் இயக்குனர் வெற்றிமாறன். விடுதலை 2 படமும் சில மாதங்களில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையே துரை செந்தில்குமார் இயக்கத்தில் கருடன் படம், சூரிக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து வீடியோ ஒன்றை நேற்றிரவு சூரி பதிவு செய்திருக்கிறார். அதில் சூரி கூறியிருப்பதாவது, கருடன் படம் வெளியாகி ஒரு வாரமாகிறது. இந்த ஒரு வார காலத்தை என்னால் மறக்கவே முடியாது. அந்தளவுக்கு கருடன் படத்தை வெற்றி பெறச் செய்த உங்களுக்கு என் சார்பாக, என் குடும்பம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கொண்டாடும் விதமான ஒரு படமாக கருடன் அமைந்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்த படத்தின் வெற்றிக்காக கடினமாக உழைத்த படக்குழுவினருக்கு நன்றி. 22 வருஷங்களுக்கு முன்னாடி வெறுங்கையோட சென்னைக்கு வந்த சூரியை இன்னும் நான் மறக்கலே. இந்த தருணத்துல நான் இருக்கிற இந்த இடம் ரசிகர்களாகிய நீங்கள் தந்தது. காலம் முழுவதும் நல்ல படைப்புகளை உங்களுக்கு தர காத்திருக்கிறேன், என நெகிழ்ச்சியாக அந்த வீடியோவில் சூரி பேசியிருக்கிறார்.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்;https://www.facebook.com/watch/?mibextid=w8EBqM&v=1538872316675464&rdid=WAdsB34i4sSP2oCv

- Advertisement -

சற்று முன்