- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரை டவுசர் காலத்தில் அவர் தோள் மீது அமர்ந்து, அதே போல் இப்போதும்… - மனமுருகி...

அரை டவுசர் காலத்தில் அவர் தோள் மீது அமர்ந்து, அதே போல் இப்போதும்… – மனமுருகி சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட நடிகர் சூரி

- Advertisement -

நடிகர் சூரி தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ரசிகர்கள் மனம் கவர்ந்தவர். ஒரு கட்டத்தில், அவரது திறமையான நடிப்பை பார்த்து இயக்குனர் வெற்றிமாறன் அவரை தனது விடுதலை படத்தில் ஹீரோவாக மாற்றினார். கான்ஸ்டபிள் குமரேசன் என்ற கேரக்டரில் மிக அற்புதமான ஒரு நடிப்பை தந்தார் நடிகர் சூரி.

விடுதலை படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து இப்போது நடிகர் சூரி கருடன், கொட்டுக்காளி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார். தொடர்ந்து இன்னும் சில படங்களில் நடிக்க அவர் கமிட்டாகி இருக்கிறார். முன்னணி ஹீரோவாக வரும் ஆண்டுகளில் சூரி வெற்றி பெற பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன.

- Advertisement -

கடந்த 19ஆம் தேதி நாடாளுமன்ற ஓட்டுப்பதிவு நடந்த நாளன்று, வாக்குச்சாவடிக்கு தன் மனைவியுடன் சென்றார் நடிகர் சூரி. வாக்காளர் பெயர் பட்டியலில் அவர் பெயர் இல்லாததால், ஓட்டு போடும் வாய்ப்பை அவர் இழந்தார். இதற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டார் நடிகர் சூரி.

அந்த வீடியோவில், எங்கு தவறு நடந்தது என்று தெரியவில்லை. எனக்கு ஓட்டுரிமை என்று இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் கடந்த முறை உட்பட நான் எல்லா தேர்தல்களிலும் என்னுடைய ஓட்டை பதிவு செய்து இருக்கிறேன். ஆனால் இன்று ஜனநாயக கடமை ஆற்ற முடியாதது எனக்கு மிகப்பெரிய வருத்தம் என்றாலும், அடுத்த தேர்தலில் கண்டிப்பாக என் ஓட்டை பதிவு செய்வேன் என்று கூறிவிட்டு சென்றார். அந்த வீடியோவும் வைரலானது.

- Advertisement -

தற்போது சித்திரை திருவிழா, மதுரையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் இன்று சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சூரி கலந்து கொண்டு, கள்ளழகர் ஆற்றில் இறங்கிய அற்புத காட்சியை கண்டு மகிழ்ந்திருக்கிறார்.

இதுகுறித்து தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சூரி, அரை டவுசர் வயதில் அப்பாவின் தோள் மீது உட்கார்ந்து முதன் முதலில் அழகரை பார்த்தேன். அப்போது அப்பா இவர்தாண்டா அழகர். நல்லா பாரு என்றார். அது மறக்க முடியாத நாள்.அதற்கு அப்புறம் இப்போதுதான், இவ்வளவு அருகில் அழகரை பார்க்கிறேன். இது பேரானந்தம், நம்ம கள்ளழகர் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் என்று அந்த பதிவில் உருக்கமாக சூரி கூறி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்