- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்துல வந்த பிரச்னை இந்த படத்துல வந்துடக் கூடாது, அலர்ட் ஆறுமுகமாக மாறிய நடிகர்...

அந்த படத்துல வந்த பிரச்னை இந்த படத்துல வந்துடக் கூடாது, அலர்ட் ஆறுமுகமாக மாறிய நடிகர் சூர்யா

- Advertisement -

நடிகர் சூர்யா இப்போது கங்குவா படப்பிடிப்பை முடித்திருக்கிறார். அடுத்து சுதா கொங்காரா படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். இந்தி படம் ஒன்றிலும் நடிக்கிறார். இதுதவிர ஆங்கில படம் ஒன்றில் நடிக்கவும் முடிவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிகர் சூர்யா நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இதுவரை வேறு யாரும் அந்த படத்தில் நடிக்க முடிவானதாக தெரியவில்லை. வெற்றிமாறன் படத்தில் அஜீத்குமார் நடிப்பது உறுதி என்றாலும், அது வாடிவாசல் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

அத்துடன் சமீபத்தில் நடந்த கலைஞர் 100 விழாவில், அமீரும் சூர்யாவும் நேருக்கு நேர் சந்தித்து நலம் விசாரித்து விட்டதால், பழைய பகை எதுவுமின்றி மீண்டும் இருவரும் சேர்ந்து நடிக்க பிரச்னையில்லை என்றும் பேசப்படுகிறது. அதனால் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் வாடிவாசல் படப்பிடிப்பு துவங்க வாய்ப்புள்ளது. இப்போது நடிகர் சூர்யா, மனைவி ஜோதிகா மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் செட்டிலாகி விட்டார்.

இதற்கிடையே சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடித்த கங்குவா படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் சூர்யா அறிமுகமாகும் காட்சியில் பாடல் காட்சி இடம்பெறுகிறது. அதாவது ரஜினி ஸ்டைலில் சூர்யா, பாடல் காட்சியில்தான் அறிமுகமாகிறார்.

- Advertisement -

அப்போது சூர்யாவுடன் ஆயிரம் பேர் வரை நடனக்கலைஞர்கள் நடனமாடுவது போல் காட்சி எடுக்க தி்ட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் நடித்த லியோ படத்தில், அண்ணன் நான் வரவா என்ற பாடல் காட்சியில், 1200 பேர் நடனமாடிய நிலையில், அவர்களுக்கு சம்பளம் தரவில்லை என்ற பிரச்னை எழுந்து விவகாரமானது.

அதனால், சூர்யா நடித்த அந்த பாடல் காட்சியில் 100 பேர் மட்டும் இருந்தால் போதும், லியோ படம் போல நமக்கும் பிரச்னை வர வேண்டாம் என்று டைரக்டரிடம் சூர்யா கூறியதால், அவர் சொன்னபடி அந்த பாடல் காட்சியை எடுத்துள்ளனர். பின்பு, மல்ட்டிபில் இமேஜ் குளோனிங் மூலம், 100 பேரையே 1000 பேராக தொழில்நுட்பத்தில் மாற்றி பாடல் காட்சியில் காட்டியிருக்கிறார்கள்.

- Advertisement -

சற்று முன்