- Advertisement -
Homeபொழுதுபோக்குஎதை செய்தாலும் வில்லங்கம்தானா - சூர்யா கார்த்தி எஸ்கே பற்றி இப்படி ஒரு சர்ச்சையை கெளப்பி...

எதை செய்தாலும் வில்லங்கம்தானா – சூர்யா கார்த்தி எஸ்கே பற்றி இப்படி ஒரு சர்ச்சையை கெளப்பி விட்டுட்டாங்களே – உங்க அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா

- Advertisement -

தமிழ் சினிமா நடிகர் சிவக்குமார் மகன்களான சூர்யா, கார்த்தி இருவருமே முன்னணி நடிகர்களாக இருந்து வருகின்றனர். கார்த்தி நடிக்க வருவதற்கு முன்பே, சூர்யா மிக இளம் வயதில் நடிக்க வந்துவிட்டார். நேருக்கு நேர் படத்தில் பார்ப்பதற்கு 10ம் வகுப்பு மாணவன் போல தான் சூர்யா இருந்தார். மௌனம் பேசியதே படம்தான் அவரை ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்தியது.

அதே போல் வெளிநாட்டில் படித்து பாரின் ரிடர்ன் ஆக வந்த கார்த்தியை, பருத்திவீரன் படத்தின் மூலம் அக்மார்க் குத்தப்பட்ட சண்டியராக மாற்றி நடிக்க வைத்தார் டைரக்டர் அமீர். புதுமுக நடிகர்களை நடிக்க வைப்பதே சிரமம். அதுவும் இதுபோன்ற சவாலான கேரக்டர்களில் அனுபவமுள்ள நடிகர்களே சொதப்பும் நிலையில், தன் மீது நம்பிக்கை வைத்து கார்த்தியை பருத்திவீரனாக மாற்றினார் அமீர்.

- Advertisement -

சிவக்குமார், கார்த்தி போன்றவர்களை போல சினிமா பின்னணி இல்லாமல் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் சிவகார்த்திகேயன். மெரினா படம் மூலம் அறிமுகமான அவர் அடுத்தடுத்த சில படங்களிலேயே முன்னணிக்கு வந்துவிட்டார். இப்போது டாப் நடிகர்களில் அவரும் ஒருவர். ஆனால் இமான் சொன்ன எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டால் இவரது பெயரும் டேமேஜ் ஆனது.

இந்த சூழலில், இப்போது வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பாரா மாட்டாரா என்பது பெரிய பிரச்னையாக பேசப்பட்டுக் கொண்டு இருக்கிறது. ஏனெனில் ஞானவேல் ராஜா, இயக்குநர் அமீரை பற்றி தரக்குறைவாக பேசியது தமிழ் சினிமா உலகில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

- Advertisement -

இந்த பிரச்னையில் படத்தில் நடித்த கார்த்தியும் அமைதி காத்தது, குறிப்பாக சிவக்குமார் பேசாததும் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது. இந்த சூழலில் மிக்ஜம் புயல் தாக்கியதால் கனமழை காரணமாக சென்னை வெள்ளக்காடாக மாறியது. மக்கள் மழைவெள்ளத்தில் சிக்கி தவித்தனர். இதையடுத்து சூர்யா கார்த்தி தரப்பில் ரூ. 10 லட்சம் நிதியுதவி தரப்பட்டது.

அடுத்து நேற்று நடிகர் சிவகார்த்திகேயன், அமைச்சர் உதயநிதியை சந்தித்து மழைவெள்ள நிவாரண நிதியாக ரூ. 10 லட்சத்தை வழங்கியுள்ளார். இந்த நிலையில், தங்கள் பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தை போக்கவே இப்படி சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்றோர் ரூ. 10 லட்சத்தை தூக்கி நிவாரணமாக கொடுத்துள்ளனர். இல்லை என்றால் நிச்சயமாக அவர்கள் நிதியுதவி செய்திருக்க வாய்ப்பில்லை என்று பலரும் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்