- Advertisement -
Homeபொழுதுபோக்குசர்தார் 2, கைதி 2 படங்களை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிக்கப் போவது யாருடைய டைரக்‌ஷனில்...

சர்தார் 2, கைதி 2 படங்களை தொடர்ந்து நடிகர் கார்த்தி நடிக்கப் போவது யாருடைய டைரக்‌ஷனில் தெரியுமா? கண்டிப்பா இது தரமான சம்பவம்தான்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பருத்தி வீரன் படம் மூலம் நடிகராக அறிமுகமான கார்த்தி, இப்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அப்பா சிவக்குமார், அண்ணன் சூர்யா, அண்ணி ஜோதிகா என மூன்று பேர் கார்த்திக்கு முக்கிய அடையாளங்களாக இருந்தும், அவரது பாதையில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார்.

குறிப்பாக கார்த்தி நடிப்பில் வெளியான முதல் படம் பருத்திவீரன் பெரிய வெற்றியை பெற்றது. இதில் முத்தழகு கேரக்டரில் நடித்த பிரியாமணிக்கு சிறந்த நடிகை தேசிய விருது கிடைத்தது. படத்தை இயக்கிய இயக்குனர் அமீர், இன்றும் தமிழ் சினிமாவில் கவனம் கொள்ள வேண்டிய படைப்பாளியாக இருந்து வருகிறார்.

- Advertisement -

அதன் பிறகு சிறுத்தை, அலெக்ஸ் பாண்டியன், பொன்னியின் செல்வன், தோழா, கடைக்குட்டி சிங்கம், ஆல் இன் ஆல் அழகுராஜா, கொம்பன், நான் மகான் அல்ல, பையா என பல வெற்றிப் படங்களை கொடுத்த கார்த்திக்கு, அவரது 25வது படம் ஜப்பான் மட்டுமே பெரிய தோல்வியை கொடுத்தது. அதே போல் தேவ் படமும் சரியாக போகவில்லை.

ஆனால் இப்போது சமீபத்தில் வெளியான மெய்யழகன் படம் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்திருக்கிறது. 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கிய இந்த படத்தில் நடிகர் அரவிந்தசாமி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து வா வாத்தியார் என்ற கார்த்தி படம், வரும் டிசம்பரில் திரைக்கு வருகிறது.

- Advertisement -

இப்போது நடிகர் கார்த்தி சர்தார் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கைதி 2 படத்தில் நடிக்கிறார். அதிகபட்சம் கைதி 2 படத்தை, 50 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள் முடித்துவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் கைதி 2 படத்தை தொடர்ந்து, அவர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ் இப்போது, துருவ் விக்ரம் நடிப்பில் பைசன் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு மாரி செல்வராஜ், கைதி 2 படத்தை முடித்து விட்டு வரும் கார்த்தியுடன் கைகோர்த்து, புதிய படத்தை உருவாக்க உள்ளனர். இதுவரை மாரி செல்வராஜ் இயக்கிய 4 படங்களுமே ஹிட் படங்கள் என்ற நிலையில், கார்த்தியை வைத்து இயக்கும் படமும் தரமான சம்பவமாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்