- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூர்யாவிடம் அடம்பிடித்து சாதித்த இயக்குனர் ஆர்ஜே சூர்யா, இதெல்லாம் நல்லாவா இருக்குது? - விமர்சிக்கும்...

நடிகர் சூர்யாவிடம் அடம்பிடித்து சாதித்த இயக்குனர் ஆர்ஜே சூர்யா, இதெல்லாம் நல்லாவா இருக்குது? – விமர்சிக்கும் ரசிகர்கள்!

- Advertisement -

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான கருப்பு படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இந்த படம் இதுவரை 340 கோடி ரூபாய் வசூலை அள்ளியுள்ளது. சூர்யாவின் சினிமா பயணத்தில் மிக அதிக வசூலை குவித்தது கருப்பு படம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2013ம் ஆண்டில் வெளியான சிங்கம் 2 படத்துக்கு பிறகு கடந்த 13 ஆண்டுகளாக பெரிய வெற்றிப் படமே இல்லாத சூழலில் இருந்த நடிகர் சூர்யாவுக்கு கருப்பு படம் சூப்பர் கம்பேக் கொடுத்துள்ளது. இதனால் சூர்யா ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர் சூர்யா கருப்பு படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் மற்றும் படத்தின் ஒளிப்பதிவாளர், எடிட்டர் ஆகியோருக்கு மஹிந்திரா கார்களை பரிசாக வழங்கியிருக்கிறார். ஆனால் படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜிக்கு ஏன் சூர்யா கார் பரிசளிக்கவில்லை என்று ரசிகர்களிடையே விவாதம் எழுந்தது.

தற்போது அதுகுறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் சூர்யா ஏற்கனவே கார்களை பரிசாக இசையமைப்பாளர் எடிட்டர் கேமராமேன் ஆகியோருக்கு வழங்கிய போது ஆர்ஜே பாலாஜிக்கும் சேர்த்து 4 கார்களை மொத்தமாக வாங்கியுள்ளார்.

- Advertisement -

ஆனால் படத்தின் இயக்குனர் நான், மற்றவர்களுக்கு தரும் கார்களையே எனக்கும் பரிசாக தருவீங்களா? எனக்கு இந்த கார் பிடிக்கவில்லை. நான் விரும்புகிற கார்தான் எனக்கு வேண்டும் என்று ஆர்ஜே பாலாஜி கட் அண்ட் ரைட்டாக பேசியிருக்கிறார். படத்தின் இயக்குனர் என்ற முறையில் அவர் விரும்பியபடி வேறு காரை தற்போது சூர்யா பரிசாக வழங்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி கருப்பு பட இயக்குனர் ஆர்ஜே பாலாஜிக்கு இன்னோவா ஹைக்ராஸ் டாப் மாடல் காரை சூர்யா பரிசாக வழங்கியிருக்கிறார். இந்த காரின் விலை ரூ. 40 லட்சம். மற்றவர்களுக்கு சூர்யா பரிசாக தந்த கார்களை விட இந்த காரின் விலை ரூ. 10 லட்சம் வரை அதிகம் என்கின்றனர். பரிசாக வழங்குவதை சந்தோஷமாக ஏற்றுக்கொள்ளாமல் இப்படி அடம்பிடித்து ஆர்ஜே பாலாஜி கார் வாங்கியதை ரசிகர்கள் பலரும் இதெல்லாம் நல்லாவா இருக்குது? என்று விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்