- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த படத்துடன் நான் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன், அதிரடியாக அறிவித்த நடிகர்...

அந்த படத்துடன் நான் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன், அதிரடியாக அறிவித்த நடிகர் கமல்ஹாசன் – தவித்துப் போன ரசிகர்கள்!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் இப்போது நடிகராக மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் தமிழகத்தில் வலம் வந்துக்கொண்டு இருக்கிறார். 5 வயதில் நடிக்க ஆரம்பித்த அவர் இப்போது 71 வயதிலும் நடித்துக்கொண்டு இருக்கிறார். விரைவில் அன்பறிவ் மாஸ்டர் இயக்கத்தில் தனது 237 படத்தில் நடிகர் கமல் நடிக்க இருக்கிறார். விரைவில் படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது.

கடந்த 2018ம் ஆண்டில் மக்கள் நீதிமய்யம் என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்த கமல்ஹாசனுக்கு தமிழக மக்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பும் ஆதரவும் கிடைக்காமல் போனது. சினிமா கலைஞராக அவரை கொண்டாடிய ரசிகர்கள் ஏனோ அரசியல்வாதியாக அவருக்கு ஆதரவு தர முன்வரவில்லை. இதனால் சட்டசபை தேர்தல் நாடாளுமன்ற தேர்தல்களில் கமல் கட்சி படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

ஒரு கட்டத்தில் அரசியலில் தனித்து நின்று தாக்குப்பிடிக்க முடியாத கமல்ஹாசன், திமுகவுக்கு ஆதரவு தர முன்வந்தார். ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் அன்பையும் ஆதரவையும் பெற்ற அவர் திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரங்களிலும் ஈடுபட்டு தன் விசுவாசத்தை நிரூபித்தார். அதன் பலனாக திமுகவின் ஆதரவால் இப்போது ராஜ்ய சபா எம்பியாக கமல் மாறியிருக்கிறார்.

இந்நிலையில் கேரளாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது அவரிடம், இன்றைய தலைமுறையினர் புதிய கூட்டணியை எதிர்பார்ப்பதால் மூத்த நடிகர்கள் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்துவிட்டதா என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த நடிகர் கமல்ஹாசன் கூறுகையில், புதிய கூட்டணிகள் உருவாக வேண்டும் என்பது முக்கியம்தான்.

- Advertisement -

பழைய விஷயங்களுக்கு ஓய்வு கொடுப்பதை ரசிகர்களே கவனித்துக் கொள்வார்கள். ஆனால் பழைய பிரபலங்களை ஓய்வு பெறச் சொல்வது அவர்களின் வேலை. என்னை யாரும் இதுவரை ஓய்வெடுக்க சொன்னது இல்லை. ஆனால் மோசமான படங்களில் நடிக்கும் போது ஓய்வு பெற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றி இருக்கிறது.

ஆனால் அப்போது என் நண்பர்கள், இத்துடன் நிறுத்தி விடாதே. ஒரு நல்ல படம் செய்துவிட்டு பின்பு ஓய்வு எடுத்துக் கொள் என்று சொல்லி இருக்கிறார்கள். அதனால் நான் இன்னும் அப்படிப்பட்ட ஒரு நல்ல படத்தை தான் தேடிக் கொண்டிருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். இதன் மூலம் ஒரு மிகச்சிறந்த வெற்றி படத்தை கொடுத்துவிட்டு நான் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்று விடுவேன் என்று நடிகர் கமல்ஹாசன் சூசகமாக கூறியிருக்கிறார் இது அவரது ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

- Advertisement -

சற்று முன்