- Advertisement -
Homeபொழுதுபோக்கு‘திருஷ்டி பட்டு விட்டதா?’ - மார்க் ஆண்டனி படத்தை தடை செய்யக் கோரி போலீஸ் கமிஷனரிடம்...

‘திருஷ்டி பட்டு விட்டதா?’ – மார்க் ஆண்டனி படத்தை தடை செய்யக் கோரி போலீஸ் கமிஷனரிடம் புகார். ‘கம்பேக்’ கொடுத்த விஷாலுக்கு மீண்டும் சோதனை

- Advertisement -

தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வந்த விஷால், கடந்த ஒரு வாரமாக மகிழ்ச்சியான மனநிலையில் காணப்படுகிறார். அதற்கு முக்கிய காரணம், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே சூர்யா நடிப்பில், சில தினங்களுக்கு முன் வெளிவந்த மார்க் ஆண்டனி படம், வசூலில் 50 கோடி ரூபாயை கடந்திருக்கிறது.

தியேட்டர்களில், ரசிகர்கள் கூட்டம் தொடர்ந்து மொய்த்து வரும் நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு விஷாலுக்கு ஒரு கம்பேக் கிடைத்திருக்கிறது. குறிப்பாக, இதில் ப்ளே பாய் கேரக்டரில், எஸ்ஜே சூர்யா, வேற லெவலில் சம்பவம் செய்திருக்கிறார் என ரசிகர்களின் பாராட்டுகள் குவிந்து வருகிறது. குறிப்பாக, நீண்ட நாட்களுக்கு பிறகு சில்க் ஸ்மிதா போன்ற தோற்றம் கொண்ட நடிகையை பார்த்து, ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

இந்த சூழலில், கோவையை சேர்ந்த ஜாஸ்மின் மதியழகன் என்ற திருநங்கை, மார்க் ஆண்டனி படத்தை தடை செய்ய வேண்டும், படத்தை இயக்கிய இயக்குநர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையே, தமிழகம் முழுவதும் திருநங்கைகள் தொடர்ந்தால் என்ன செய்வது என்ற அச்சத்தை இது ஏற்படுத்தியுள்ளது.

மார்க் ஆண்டனி படத்தில், திருநங்கைகளை அவமதிக்கும் விதமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நகைச்சுவை என்ற பெயரில், திருநங்கைகளை கேலிப்பொருளாக சித்தரித்துள்ளனர். இதுபோன்ற அவமானப்படுத்தும் காட்சிகளால், திருநங்கைகளின் மீதான மக்களின் பார்வை மாறுகிறது. எனவே, இந்த படத்தை தடை செய்ய வேண்டும். அல்லது, படத்தில் இடம்பெற்றுள்ள அத்தகைய காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். படத்தின் இயக்குநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருநங்கை ஜாஸ்மின் மதியழகன் அளித்துள்ள புகாரால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து தோல்வி படங்களாக தந்து, மனம் நொந்து போயிருந்த விஷாலுக்கு மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி, நிம்மதியை, சந்தோஷத்தை கொடுத்திருந்தது. இந்த சூழலில், திருநங்கை தந்துள்ள இந்த புகார் மீண்டும் அவருக்கு ஒரு சோதனையாக அமைந்துள்ளது. இதையடுத்து, படத்தில் சர்ச்சைக்குரிய அந்த காட்சிகள் நீக்கப்படுமா, என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சற்று முன்