கங்குவா படத்துக்கு பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் ரெட்ரோ. சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இந்த படம் இம்மாதம் 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று வெளியானது. 2டி எண்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் சார்பில் இந்த படத்தை நடிகர் சூர்யா, இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இணைந்து தயாரித்திருந்தனர். படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.
இந்த படம் ஓடிடி உரிமம் சேட்டிலைட் மற்றும் ஆடியோ ரைட்ஸ் விற்பனை உள்பட உலகம் முழுவதும் மொத்தம் 235 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்திருந்தது. இந்நிலையில் ரெட்ரோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் சூர்யா, அகரம் பவுண்டேசன் கல்வி அறக்கட்டளைக்கு ரூ. 10 கோடியை நன்கொடையாக வழங்கினார்.
நடிகர் சூர்யாவின் இந்த செயல் பெரிய அளவில் பாராட்டுக்குரிய நிகழ்வாக அமைந்தது. ஏனெனில் இதுவரை எந்த தமிழ் பட ஹீரோவும் கல்வி நிதியாக இவ்வளவு பெரிய தொகையை வழங்கியது இல்லை. அதனால் நடிகர் சூர்யா ஹீரோவாக படத்தில் ஜெயிப்பதை காட்டிலும் இதுபோன்ற உதவும் செயலால் நிஜ வாழ்வில் ஹீரோவாக இருக்கிறார் என பாராட்டுகள் குவிந்தது.
ரெட்ரோ படத்துக்கு பிறகு நடிகர் சூர்யா நடித்து வரும் படம் வேட்டை கருப்பு. இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சூர்யாவுடன் திரிஷா சுவாசிகா ஷிவதா மன்சூர் அலிகான் நட்டி நடராஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை நெருங்கி விட்டது.
வேட்டை கருப்பு படத்தில் நாயகியாக நடித்துள்ள திரிஷாவின் போர்ஷன் முடிந்துவிட்டது. இன்னும் 2 நாட்கள் பேட்ச் ஒர்க் முடிந்த பிறகு படத்தை முழுமையாக போட்டு ரஷ் பார்க்க இயக்குனர் ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டுள்ளார். மீண்டும் தேவைப்படும் பட்சத்தில் சூர்யா நடிக்க வேண்டிய காட்சிகளை எடுக்க முடிவு செய்திருக்கிறார்.
அய்யனார் சுவாமி கதை மற்றும் கோர்ட் கதைக்களம் என உருவான இந்த படத்தில் சூர்யா ஒருவிதமான நார்மல் கெட்டப்பில் இருக்கிறார். ஆனால் அடுத்து அவர் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி படத்தில் வேறு விதமான புது கெட்டப்பில் சூர்யா நடிக்க உள்ளார். அந்த கெட்டப்புக்கு மாறி விட்டால் பிறகு வேட்டை கருப்பு படத்தில் சூர்யா நடிக்க முடியாது. அதனால் ஆர்ஜே பாலாஜி சொல்லும் வரை சூர்யா தனது இப்போதைய கெட்டப்பை மாற்ற முடியாது. ஓகே, நீங்க அடுத்த படத்தில் நடிக்க போகலாம் என்று ஆர்ஜே பாலாஜி சொல்லும் சம்மதத்திற்காக சூர்யா காத்திருக்கிறார்.





