சினிமாவில் புதிய நடிகராக அறிமுகமாகி வளர்ந்து வரும் காலகட்டத்தில் அந்த நடிகர்களுக்கு, சில படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக்கொடுக்கும். அந்த படமே, அடுத்தடுத்த நகர்வுகளுக்கும் முன்னேற்ற பாதைக்கு வழிகாட்டும் துருப்பு சாவியாக இருந்திருக்கும். இதை அனுபவசாலி நடிகர்கள் பின்னர் அதை குறிப்பிட்டு சொல்லி இருக்கின்றனர்.
அதே போல் நடிகர் சிவக்குமார் மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவுக்குள் வந்த நடிகர் கார்த்திக்கு, மிகப்பெரிய அடையாளத்தை அங்கீகாரத்தை வரவேற்பை பெற்று தந்த படம் பருத்தி வீரன். முதல் படமே அவரை மாஸ் ஹீரோவாக காட்டி விட்டது. இதற்கு காரணம் படத்தின் இயக்குனர் அமீர் தான். பருத்திவீரன் படத்தில், கார்த்தி நடிப்பை செதுக்கி செதுக்கி சிற்பமாக தந்திருந்தாா்.
அதேபோல் கார்த்திக்கு மற்றொரு நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுத்த படம் பையா. இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். இந்த படத்தில் கார் ஒரு முக்கிய கேரக்டராக இருந்தது. படத்தின் பெரும்பாலான காட்சிகளில் கார்த்தி – தமன்னா காரில் பயணித்துக்கொண்டே தான் இருப்பா்.
கடந்த 2010ம் ஆண்டில் வெளிவந்த இந்த படத்தை டைரக்டர் லிங்குசாமி இயக்கியிருந்தார். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். அடடா மழைடா அடை மழைடா போன்ற சூப்பர்ஹிட் பாடல்களும் படத்தில் இடம்பெற்றிருந்தன. படம் மிகப்பெரிய வரவேற்பை, வெற்றியை பெற்றது. இந்த படத்தின் 2ம் பாகத்தை கார்த்தி ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்த நிலையில், பலமுறை இந்த கேள்வியை லிங்குசாமியிடம் கேட்டிருந்தனர்.
சமீபத்தில் பையா 2 படம் குறித்து பேசிய இயக்குனர் லிங்குசாமி, பையா படத்தின் 2ம் பாகம் நிச்சயமாக வரும். அந்த படத்துக்கான கதையை நான் தயார் செய்துவிட்டேன். கார்த்தியிடம் இதுகுறித்து பேசிய போது, பையா படம் வெளியாகி 14 ஆண்டுகளாகி விட்டது. என் தோற்றத்தில் முதுமை வந்துவிட்டது. ஒரு சிறுமிக்கு தந்தையாகவும் கைதி படத்தில் நடித்துவிட்டேன் என்று கூறினார். அதனால் பையா 2 படத்தில் நடிக்க யோசிக்கிறார்.
அதனால் வேறு நடிகர் யாரையாவது வைத்துதான் இந்த படத்தை எடுக்க வேண்டும். இந்த படத்திலும் நிச்சயம் கார் இருக்கும். ஆனால் வேறு காதலர்கள் படத்தில் இருப்பார்கள் என்று கூறியிருக்கிறார். அதாவது இந்த பையா 2 படத்தில் கார்த்தி – தமன்னா நடிக்கவில்லை என்கிறார். தனக்கு மாஸ் படங்களை கொடுத்த டைரக்டர்களை சூர்யா ஒதுக்கி வருவதை போல, அவரது தம்பி கார்த்தியும் லிங்குசாமி போன்ற டைரக்டர் படத்தில் நடிக்காமல் தவிர்ப்பது அவரது சினிமா பயணத்தை தான் பாதிக்கும். சூர்யா போலவே, கார்த்தியும் இதை பாலோ அப் பண்ணக் கூடாது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.





