- Advertisement -
Homeபொழுதுபோக்குமாசு படம் தோல்விக்கு அவர்தான் காரணமா? நான் நெனைச்ச மாதிரி எடுக்க முடியலே, உண்மையை உளறிக்...

மாசு படம் தோல்விக்கு அவர்தான் காரணமா? நான் நெனைச்ச மாதிரி எடுக்க முடியலே, உண்மையை உளறிக் கொட்டிய இயக்குனர் வெங்கட்பிரபு- கிளம்பியாச்சு புது பஞ்சாயத்து!

- Advertisement -

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்த திகில் படம் மாசு என்கிற மாசிலாமணி. இந்த படம் கடந்த 2015ம் ஆண்டில் வெளிவந்தது. இந்த படத்தில் நயன்தாரா, பிரணிதா சுபாஷ், பிரேம்ஜி, சண்முகசுந்தரம், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி, பார்த்திபன், கருணாஸ், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

சென்னை 28, மங்காத்தா, கோவா, சரோஜா போன்ற வெற்றிப் படங்களை தந்திருந்த வெங்கட்பிரபு இந்த படத்தை டைரக்ட் செய்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இதில் ஒரு சூர்யா, ஏமாற்று பேர்வழியாக இருந்து திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுபவராகவும், மற்றொரு சூர்யா இலங்கை தமிழ் பேசும் தமிழனாகவும் நடித்திருந்தார்.

- Advertisement -

இந்த படத்தில் வில்லனாக சமுத்திரக்கனி நடித்திருந்தார். இறந்தவர்கள், சூர்யா கண்களுக்கு மட்டுமே தெரியும் நிலையில் அவர்களது நிராசைகளை நிறைவேறும் ஒரு கேரக்டரில் சூர்யா நடித்திருந்தார். மனைவி, குழந்தையை கொன்ற சமுத்திரக்கனியை சூர்யா பழிவாங்குவதும்தான் இந்த படத்தின் கதை.

ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மிகவும் மோசமான திரைக்கதையால் இந்த படம் பார்த்த வந்த சூர்யா ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர். வெங்கட்பிரபு படம் என்ற எதிர்பார்ப்புடன் வந்த பொதுவான ரசிகர்களும் மாசு என்கிற மாசிலாமணி மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்தது. இந்நிலையில் தி கோட் பட பிரமோ நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் வெங்கட்பிரபு மாசு படத்தின் தோல்விக்கு காரணம் என்ன என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -

வெங்கட்பிரபு கூறுகையில், சூர்யா நடிப்பில் மாசு படத்தை வேறு மாதிரியாக ட்ரீட் செய்திருந்தேன். கதை முழுக்க முழுக்க க்யூமர் சப்ஜெக்ட்டாக யோசித்து வைத்திருந்தேன். ஆனால் சூர்யா தரப்பில், மங்காத்தா மாதிரி ஒரு மாஸ் படம் பண்ணியிருக்கீங்க. இதிலும் அந்த எலிமென்ட்ஸ் வேண்டும் என்று சொன்னதால் கதையில் மாற்றங்கள் செய்தேன்.

மாசு படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளை 1980களில் நடப்பது போல் திட்டமிட்டு இருந்தேன். ஆனால் கதையில் மாற்றம் செய்த போது நான் நினைத்த மாதிரி படத்தை எடுக்க முடியவில்லை. மங்காத்தா, சென்னை 28 படங்களை நான் நினைத்த மாதிரி, யோசித்த மாதிரி அப்படியே எடுத்தேன். ஆனால் மாசு படத்தில் நான் சில மாற்றங்களை செய்ததால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார். அதாவது சூர்யா தரப்பில் செய்த குறுக்கீடும், தலையீடும்தான் மாசு படத்தின் பிளாப்புக்கு காரணம் என்று மறைமுகமாக சொல்லிவிட்டார் வெங்கட்பிரபு.

- Advertisement -

சற்று முன்