தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை தந்து ரசிகர்களின் மனம் கவர்ந்தவர் நடிகர் சூர்யா. குறிப்பாக மௌனம் பேசியதே நந்தா காக்க காக்க கஜினி ஆகிய படங்கள்தான் நடிகர் சூர்யாவுக்கு அவரது சினிமா பயணத்தில் முக்கிய திருப்புமுனை படங்களாக அமைந்தன. குறிப்பாக இயக்குனர்கள் அமீர் பாலா இருவரும் அவரை ஒரு நாயகனாக மாற்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தந்தார்கள்.
நடிகர் சூர்யா நடித்த கருப்பு படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் மௌனம் பேசியதே ஆறு படங்களுக்கு பிறகு மீண்டும் திரிஷா சூர்யாவுடன் இணைந்து நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் நட்டி நடராஜ் மன்சூர் அலிகான் ஆர்ஜே பாலாஜி யோகிபாபு ஸ்வாசிகா ஷிவதா நாயர் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர்.
அய்யனார் சாமி கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் நடிகர் சூர்யா வக்கீல் கேரக்டரில் நடித்திருக்கிறார். ஏற்கனவே ஜெய்பீம் மற்றும் எதற்கும் துணிந்தவன் படங்களில் வக்கீலாக சூர்யா நடித்திருக்கிறார். இந்த படத்தில் வில்லனாக, படத்தின் இயக்குனர் நடிகர் ஆர்ஜே பாலாஜியே நடித்திருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு ஹீரோ நடிகர் சக ஹீரோ நடிகர்களை பாராட்டிப் பேசுவது என்பது இப்போது எல்லாம் அதிசயமாகி விட்டது. தமிழ் சினிமாவில் ரஜினி கமல் இருவரும் மட்டுமே ஒருவரை ஒருவர் எப்போதுமே உண்மையாக பாராட்டி பேசிக்கொள்வார்கள். அது அவர்களது நெருக்கமான அன்பின் நட்பின் வெளிப்பாடாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் சூர்யாவும் அப்படி பேசியிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற நடிகர் சூர்யா பேசியதாவது, நீங்க எல்லோருமே ரொம்ப பெருமையாக நினைக்கலாம். நான் தனுஷோட ரசிகர். எனக்கு தனுஷ் ரொம்ப பிடிக்கும். நீங்க காலரை தூக்கி விட்டு சொல்லிக்கலாம். எந்த படம் தனுஷ் பண்ணினாலும் அவர்கிட்ட சிறந்த நடிப்பை நீங்க பார்க்கலாம். அது அவரோ கடைசி படம் வரைக்கும் இருக்கும் என்றார்.
அடுத்து மேடையில் பேசிய நடிகர் தனுஷ் கூறுகையில், சூர்யா சார் ஈகோ இல்லாமல் இங்கே சபையில் நின்று இவ்வளவு பேர் முன்னாடி என்னுடைய ரசிகர் என்று நீங்க சொல்றது பெரிய பெருந்தன்மை வேண்டும். எல்லோர்கிட்டேயும் அது இல்லே. யார் எப்போ டப்புன்னு சரிவாங்கன்னு பார்த்துட்டே இருக்கிற டைம், கண்ணை சிமிட்டாம பார்த்துக்கிட்டே இருக்காங்க. ஒரு படத்தை ரசிகர்கள் ஏத்துக்க ஒரு ஷோ போதும். ஆனா நாம் ஏத்துக்க ஒரு வாரம் ஆகுது. சூர்யா சார் இப்படி சொன்னதற்கு ரொம்பவும் நன்றி என்று நடிகர் தனுஷ் கூறியிருக்கிறார்.





