இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலீஸான இந்த படம் 455 கோடி ரூபாய் வரை வசூலித்தது. ஆனால் முந்தைய ஆண்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ படம், ரூ. 565 கோடி வசூலித்தது. அதனால் லியோ படத்தை தி கோட் வசூலில் முந்த முடியவில்லை.
இதையடுத்து தற்போது விஜய், தனது 69வது படத்தில் நடித்து வருகிறார். தீரன் அதிகாரம் 1, சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை இயக்கிய எச் வினோத் இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், நரேன், பாபி தியோல், பிரியாமணி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
கடந்த 2 மாதங்களுக்கு மேலாக தளபதி 69 படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பூஜா ஹெக்டே, ஏற்கனவே விஜயுடன் பீஸ்ட் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இது விஜயுடன் அவர் ஜோடி சேரும் 2வது படமாகும். அத்துடன் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யாவின் 44வது படத்திலும், பூஜா ஹெக்டே தான் நாயகியாக நடித்துள்ளார்.
தளபதி 69 படப்பிடிப்பில், பூஜா ஹெக்டே மட்டுமின்றி மமிதா பைஜூவும் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். பிரேமலு படம் மூலம் பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மமிதா பைஜூ இந்த படத்தில் நடிப்பது ரசிகர்களின் அதீத கவனத்தை பெற்றுள்ளது. விஜய்க்கு மகளாக அல்லது தங்கையாக அவர் நடிக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் தளபதி 69 ஷூட்டிங்கில் கதாநாயகியான பூஜா ஹெக்டேவுக்கு அதிக முக்கியத்துவம் தராமல், மமிதா பைஜூ கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இயக்குனர் எச் வினோத் காட்சிகளை படமாக்கியதாக தெரிகிறது. இதையறிந்த கதாநாயகி பூஜா ஹெக்டே பயங்கரமாக கடுப்பாகி இருக்கிறார்.
மும்பை பெண்ணான என்னை படத்தில் நாயகியாக கமிட் செய்துவிட்டு, கேரளப் பெண் மமிதா பைஜூக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால், இனி நான் இந்த படத்தில் நடிக்க மாட்டேன். மும்பைக்கு சென்றுவிடுவேன் என்று எச்சரித்துள்ளார். இதனால் எச் வினோத் செய்வதறியாது குழப்பத்தில் உள்ளார். இந்த பஞ்சாயத்து இப்போது தளபதி விஜய் கவனத்துக்கு போயிருக்கிறது. தளபதி என்ன செய்யப் போகிறார் என்று படக்குழு ஆர்வமாக எதிர்பார்த்துள்ளது.





