- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் இனி நம்பர் ஒன் இடத்தில் நடிகர் சூர்யா, விஸ்வநாத் அண்ட் சன்ஸ்...

தமிழ் சினிமாவில் இனி நம்பர் ஒன் இடத்தில் நடிகர் சூர்யா, விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வியாபாரம் இத்தனை கோடிகளா? – விஜய் அஜீத் வெற்றிடங்களை நிரப்பிய கருப்பு பட நாயகன்!

- Advertisement -

நடிகர் விஜய் அரசியலுக்கு போய் விட்டார். அதுவரை அவர்தான் தமிழ் சினிமாவில் ஒரு படத்துக்கு ரூ. 250 கோடி சம்பளம் வாங்கிய நம்பர் ஒன் இடத்தில் இருந்தார். அவர் அரசியல் களத்தில் குதித்து இப்போது தமிழகத்தின் முதல்வராகி விட்டார். இனி சினிமா பக்கம் அவர் திரும்பி பார்க்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த நடிகர் அஜீத்குமாரும் சினிமாவில் தொடர்ந்து ஆர்வம் காட்டாமல் கார் ரேஸ் கார் ரேஸ் என்று எப்போதுமே அதில்தான் முழு ஈடுபாடும் காட்டி வருகிறார். அதனால் விஜய் இடத்தை பிடிக்க அஜீத்குமார் தரப்பில் சிறிதளவு முயற்சியோ ஆர்வமோ இல்லை என்பது உறுதியாகி விட்டது.

- Advertisement -

இந்த நிலையில் நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும் தமிழ் சினிமாவில் சூப்பர் சீனியர்களாக உள்ளனர். அவர்களை இந்த போட்டியாளர்கள் லிஸ்ட்டில் கொண்டு வர முடியாது. ஏனென்றால் அவர்கள் உச்சம் தொட்ட வெற்றியாளர்கள். இனி அவர்கள் படங்களில் நடிப்பது அவர்களுடைய பேஷன் மட்டும்தான்.

இந்த சூழலில் இப்போது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் ஹீரோ என்ற இடத்துக்கு வந்திருப்பவர் நடிகர் சூர்யா. கருப்பு படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பிறகு இப்போது சூர்யா தான் தி ஒன் சூர்யாவாக தமிழ் சினிமாவில் ஜொலிக்கிறார். கருப்பு படம் ரூ. 340 கோடி வசூலை அள்ளிய நிலையில் அவருக்கு மார்க்கெட் உச்சம் தொட்டுள்ளது.

- Advertisement -

இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா மமிதா பைஜூ நடித்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தின் டிஜிட்டல் விற்பனை 90 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. அதே போல் சாட்டிலைட் தியேட்டரிக்கல் என இந்த படம் இப்போதே 300 கோடி ரூபாய் வியாபாரத்தை கடந்து விட்டது. தயாரிப்பாளருக்கே இப்போதே 100 கோடி ரூபாய் லாபம் என்று சொல்லப்படுகிறது.

இப்படிப்பட்ட நிலையில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் கருப்பு படம் போலவே ஒரு பிளாக்பஸ்டர் வெற்றி படமாக இருந்து விட்டால் இன்னும் பலமடங்கு வசூலை வாரி குவித்து விடும். நடிகர் சூர்யாவும் தனது சம்பளத்தை இப்போது ரூ. 100 கோடியாக உயர்த்திய நிலையில், விஜய் அஜீத்குமாரின் வெற்றிடங்களை தி ஒன் நடிகர் சூர்யா நிரப்பியுள்ளார். அதற்கான தகுதி திறமை உள்ள நடிகர் சூர்யா தான் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.

- Advertisement -

சற்று முன்