- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதலில் காசுக்காக தான் நடிக்க வந்தேன், ஆனால் அந்த விஷயம் என்னை நடிகனாக மாற்றி விட்டது...

முதலில் காசுக்காக தான் நடிக்க வந்தேன், ஆனால் அந்த விஷயம் என்னை நடிகனாக மாற்றி விட்டது – ஓபனாக பேசிய நடிகர் சூர்யா!

- Advertisement -

அரசியல் வாரிசை போல சினிமாவில் வாரிசாக பல நடிகர்கள் நடிகைகள் வந்தாலும் புதுமுகங்களாக திரையில் அறிமுகமானாலும் திறமை உழைப்பும் இருந்தால் மட்டுமே அவர்களால் சினிமாவில் நீடித்திருக்க முடியும். தொடர்ந்து ஜெயித்து முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்க முடியும்.

தனது அப்பா நடிகர் அல்லது இயக்குனர் அல்லது தயாரிப்பாளர் என யார் வாரிசாக நடிக்க வந்தாலும் முதல் படம் மட்டுமே அவர்களுக்கு விசிட்டிங் கார்டாக அப்பாவின் புகழ் உதவும். அடுத்தடுத்த படங்களில் அவர்கள் சிறப்பான கேரக்டர்களில் நடித்து நல்ல உழைப்பை திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே ஜெயிக்க முடியும். இதுதான் சினிமாவின் நியதியாக உள்ளது.

- Advertisement -

அந்த வரிசையில் நடிகர் சிவக்குமாரின் மகன்கள் சூர்யா கார்த்தி இருவருமே நல்ல வெற்றிப் படங்களை கொடுத்து முன்னணி நட்சத்திரமாக உருவாகினர். ஆனாலும் சிங்கம் 2 படத்துக்கு பிறகு 12 ஆண்டுகளாக நடிகர் சூர்யாவுக்கு பெரிய வெற்றிப் படங்களே இல்லை. ஆனால் திறமை உழைப்பு மிக்க ஒரு சிறந்த கலைஞராக சூர்யா இருந்தும் வெற்றியை தக்க வைக்க முடியவில்லை.

எனினும் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு சாமியாக சூர்யா நடித்த கருப்பு படம் அவருக்கு பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தது. இந்த படம் ரூ. 340 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. தொடர்ந்து வெளியான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்துக்கும் பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் அந்த படமும் ரூ. 200 கோடியை கடந்து வசூலில் முன்னிலை பெற்று வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சூர்யா கூறியதாவது, முதலில் காசுக்காக தான் நான் படங்களில் நடிக்க வந்தேன். வீட்டுல ஒரு பிரச்னை இருந்துச்சு. அம்மாவுக்காக நான் பணம் சம்பாதித்து அவருக்கு அந்த பணத்தை நான் தர வேண்டிய ஒரு சூழ்நிலையில் தான் நான் நடிக்க வந்தேன். ஆனால் என்னை சுற்றியும் கிடைத்த அன்பு நான் அதை எதிர்பார்க்கவே இல்லை.

என் மீது ரசிகர்கள் வைத்த அளவு கடந்த அன்பு, எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லாத அந்த அன்பை பார்த்து நான் பிரமித்து போய்விட்டேன். எப்படி என்றால் நான் தப்பு செய்தால் கூட விழுந்தால் கூட கேவலமாக செய்தால் கூட சொதப்பினால் கூட என் மீது அவர்கள் கொண்ட அன்பு மாறவில்லை. அந்த பொறுப்பு தான் என்னை தொடர்ந்து நடிக்க வைத்தது என்று நடிகர் சூர்யா அதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்