- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட இந்த விஷயத்தில் கூட விஜய் தாம்பா கெத்து… ரஜினி, கமலுக்கு கூட இந்த பெரிய...

அட இந்த விஷயத்தில் கூட விஜய் தாம்பா கெத்து… ரஜினி, கமலுக்கு கூட இந்த பெரிய மனசு வரலையே? – கொந்தளிக்கும் தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் டாப் டெவலில் இருந்து வருகிறார். ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நிலையில் இருந்தும், திடீரென அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். நேற்று அவரது தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு, இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்து மாநில கட்சியாக அறிவித்திருப்பது விஜய் கட்சியினரையும், தொண்டர்களையும், ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது.

இந்த சூழலில் அவரது நடிப்பில் வெளியான தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம்
படமும் ரசிகர்கள் மத்தியில் மாஸ் கிளப்பி உள்ளது. முதல் நாளில் 126 கோடி ரூபாய் வசூலித்த தி கோட், 3 நாட்களில் மொத்தம் 215 கோடியை கடந்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 75 கோடி ரூபாயை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அப்பா, மகன் விஜய் என்ற இரட்டை வேடங்களில் இந்த படத்தில் விஜய் நடித்துள்ள நிலையில், மகன் வேடத்தில் நடித்துள்ள விஜய் வேற லெவலில் நடிப்பில் அசத்தியிருந்தார். வில்லனாக விஜய் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் எப்படியும் ரூ. 1000 கோடி வசூலித்து விடும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில், தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று நடந்தது. இதில் நடிகர்கள் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்ட சங்க முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் நடிகர் சங்க கடனை அடைப்பதற்கும், பாதியில் நின்று நடிகர் சங்க கட்டிடத்தின் கட்டுமான பணியை முடிப்பதற்கும் விரைவில் வெளிநாடுகளில் நட்சத்திர இரவு கலை நிகழ்ச்சி நடத்துவது எனவும், அதில் ரஜினி கமல் பங்கேற்க உள்ளதாகவும் கூறினர்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விஜய், தனது பங்களிப்பாக கடனாக இல்லாமல் நடிகர் சங்கத்துக்கு ரூ. 1 கோடி அளித்துள்ளதாக நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி கூறியிருக்கிறார். நடிகர் சங்கத்தில் நீண்ட கால மூத்த உறுப்பினர்களாக இருபப்வர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன். இவர்களை போல பல முன்னணி நடிகர்கள் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களாக, முன்னணி நடிகர்களாக உள்ள நடிகர், நடிகைகள் என கணக்கு போட்டால், 50 பேர் முதல் 100 பேர் வரை இருக்கின்றனர். இவர்களில் முதல்நிலை, 2ம் நிலை, 3ம் நிலை என பிரித்து ரூ. 1 கோடி, ரூ. 50 லட்சம், ரூ. 25 லட்சம் நிதியாக தரவும், இதுதவிர நிதி தர விருப்பமுள்ளவர்கள் ரூ. 1 லட்சம் வரை நிதி தரலாம் என்று நிலைப்பாட்டை நடிகர் சங்கம் எடுத்தாலே, பல கோடி ரூபாய் நிதி திரட்ட முடியும். ஆனால் விஜயின் பெருந்தன்மை, தாராள மனது ரஜினி, கமல் என 140 கோடி. 150 கோடி சம்பளம் வாங்குபவர்களுக்கே இல்லாத போது, இன்னும் கலைநிகழ்ச்சி நடத்தி ரசிகர்களிடம் பணம் வசூலிக்கதான் நடிகர் சங்கம் திட்டம் போடுவது வருத்தமளிக்கிறது.

- Advertisement -

சற்று முன்