- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் திருடியதை நடுராத்திரியில் அப்பாவிடம் கார்த்தி போட்டு கொடுத்து விட்டார் - வெளிநாட்டில் நடந்த சம்பவத்தை...

நான் திருடியதை நடுராத்திரியில் அப்பாவிடம் கார்த்தி போட்டு கொடுத்து விட்டார் – வெளிநாட்டில் நடந்த சம்பவத்தை புட்டு புட்டு வைத்த நடிகர் சூர்யா!

- Advertisement -

நடிகர் சிவக்குமாரின் மகன்கள் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி. இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருகின்றனர். சூர்யா நடிப்பில் கடைசியாக ரெட்ரோ படம் வெளியானது. அடுத்ததாக சூர்யா நடிப்பில் கருப்பு படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் முக்கிய அறிவிப்பு வரும் 23ம் தேதி வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

இயக்குனர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இப்போது சர்தார் 2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்ததாக அவர் நடிப்பில் கைதி 2 படம் உருவாக உள்ளது. கூலி படம் வெளியான பிறகு கைதி 2 படத்தின் ஷூட்டிங்கை துவங்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளார். நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த வா வாத்தியார் படம் விரைவில் ரிலீஸாகும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இதற்கிடையே நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் ஒரு விழா மேடையில் பேசியது இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கூறியதாவது, ஒருமுறை நாங்கள் குடும்பத்துடன் வெளிநாடு போயிருந்தோம். அங்கே ஷாப்பிங் போனோம். அங்கே ஒரு பெரிய ஷாப்பிங் மாலுக்கு சென்றோம். அங்கு கிடைக்காத பொருட்களே இல்லை. ரொம்ப பெரிய வாட்ச் கடை அது.

ஒரு பெரிய ப்ளோர் முழுக்க ஆயிரக்கணக்கான வாட்ச்கள் மட்டுமே இருந்தன. விலை ரொம்பவும் அதிகமாக சொன்னதால், அவங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கணுமே என்று நான் ஒரு வாட்சை மட்டும் எடுத்துக்கொண்டு ஓட்டல் அறைக்கு வந்து விட்டேன் என்று நடிகர் சூர்யா கூறினார்.

- Advertisement -

அதுக்கு அப்புறம் நான் சொல்றேன் என்று பேசிய நடிகர் கார்த்தி, நைட் 12 மணி இருக்கும். தூங்கிட்டு இருந்த என்னை எழுப்பினார். என்ன அண்ணன் 12 மணிக்கு எழுப்பறார் என்று நான் எந்திரிச்சேன். அப்போ என்கிட்ட, நேத்து அந்த கடைக்கு போனோம் இல்லே. அங்க இந்த வாட்ச்சை நான் சுட்டுட்டேன் என்று என்னிடம் அண்ணன் வாட்சை காட்டினார்.

உடனே நான், அப்பா திருடீட்டாம்பா என்று சத்தம் போட்டு விட்டேன். அப்பவே என் அப்பாவிடம் சொல்லி அடுத்த நாளே மறுபடியும் அந்த கடைக்கு போய் யாருக்கும் தெரியாமல் அந்த வாட்சை அங்கேயே வைத்துவிட்டு வந்து விட்டோம். மறுபடியும் அந்த கடைக்கு போய் வாட்ச் பார்க்கிற மாதிரி பார்த்துட்டு வாட்சை திரும்ப வெச்சுட்டு வந்துட்டோம் என்று இருவரும் அந்த விழாவில் கலகலப்பாக பேசியிருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்