நடிகர் கார்த்தி நடித்த சர்தார் 2 படம் வருகிற 10ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. கடந்த ஆண்டே இந்த படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் பல மாதங்களுக்கு பிறகு இப்போது சர்தார் 2 படம் ரிலீஸ் செய்வது உறுதியாகி உள்ளது. இயக்குனர் மித்ரன் இயக்கிய சர்தார் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு சர்தார் 2 ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் நடிப்பு அரக்கன் எஸ்ஜே சூர்யா வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார். மாளவிகா மோகனன் ஆஷிகா ரங்கநாதன் ரஜிஷா விஜயன் யோகிபாபு உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
சர்தார் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது இந்த விழாவில் நடிகர் சூர்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது மேடையில் பேசிய நடிகர் சூர்யா, தனது தம்பி கார்த்தி குறித்து கிண்டலடித்து பேசினார். அதே நேரத்தில் அவரது கடின உழைப்பும் சினிமாவில் நடிக்க அவர் காட்டுகிற ஆர்வம் திறமை குறித்தும் பாராட்டிப் பேசினார்.
விழாவில் நடிகர் சூர்யா பேசியதாவது, பருத்தி வீரன் படம் வெளியான போது கார்த்தியின் நடிப்பை பார்த்து வாயை பிளந்து அசந்து போய்விட்டேன். ஏய் நீ என் பக்கத்துல தானே இருந்தே? என்று ஆச்சரியப்பட்டேன். கார்த்தி யுஎஸ் போயிட்டு திரும்பி வந்த போது அரிசி மூட்டை பார்த்திருக்கீங்க இல்லே.
அந்த அரிசி மூட்டை சைஸ்ல சிப்ஸ் பாக்கெட் கிடைக்கும். அப்படி சிப்ஸ் பாக்கெட்டை சோபா பக்கத்துல வெச்சிக்கிட்டு அப்படியே எடுத்து எடுத்து சாப்பிட்டுட்டு இருந்தார். அரிசி மூட்டை அளவுக்கு சிப்ஸ் சாப்பிட்ட ஆள் அவர். ஆனால் பருத்திவீரன் படத்துக்காக டோட்டலா ஆளே மாறி உருண்டு பிறண்டு ஆடி பாடி சண்டை போட்டதெல்லாம் பார்க்கும் போது அந்த மாற்றமும் அந்த அக்கறையும் திறமையும் என்னை வியக்க வைத்தது.
வாய்ப்பு நமக்கு கிடைச்சிடுச்சு. அந்த வாய்ப்பை நாம மிஸ் பண்ணிடவே கூடாதுன்னு இதுதான். எல்லாருக்குமே கிடைக்கும் ஒரு வாய்ப்பு. அப்படி ஒரு வாய்ப்பு பருத்திவீரன் படத்துல கிடைத்த போது அவரை பார்த்து வியந்தேன். அது ஒவ்வொரு படத்திலும் கார்த்தி நடிப்பில் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்றுதான் சொல்வேன் என்று அந்த விழாவில் நடிகர் சூர்யா, தனது தம்பி கார்த்தி குறித்து பேசியிருக்கிறார்.





