- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட இப்படி ஒரு கதைக்களத்தில் நடிகர் சூர்யா நடிக்கிறாரா? - அவரது 46வது படம் குறித்து...

அட இப்படி ஒரு கதைக்களத்தில் நடிகர் சூர்யா நடிக்கிறாரா? – அவரது 46வது படம் குறித்து வெளியான முக்கிய தகவல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் சூர்யா. உன்னை நினைத்து படத்தில் மென்மையான ஒரு நாயகனாக நடித்த அவர்தான் சிங்கம் போன்ற படத்தில் அதிரடி நாயகனாக நடித்து அசத்தினார். கஜினி ஆறு காக்க காக்க ஏழாம் அறிவு பேரழகன் அயன் என பல படங்களில் வித்யாசமான கேரக்டரில் நடித்தவர் சூர்யா.

அதிலும் பேரழகன் படத்தில் அவர் நடித்த சின்னா கேரக்டர் அதே போல் நந்தா பிதாமகன் படங்களில் சூர்யாவின் கேரக்டர் மிகவும் வித்யாசமானதாகவும் நடிப்புக்கு பெரிய தீனி போட்ட படங்களாகவும் இருந்தன. தோல்வி படங்களிலும் கூட சூர்யாவின் நடிப்பு குறை சொல்ல முடியாத அளவுக்கு அழுத்தமாகவும் நேர்த்தியாகவும் இருக்கும் என்பதே உண்மை.

- Advertisement -

உதாரணமாக சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படத்தை மிக கடுமையாக விமர்சனம் செய்தவர்கள் கூட படம், திரைக்கதை சரியில்லை என்றுதான் கூறினார்களே தவிர சூர்யாவின் நடிப்பை யாரும் குறை சொல்லவில்லை. ஏனெனில் எந்த படமாக இருந்தாலும் தனது முழு திறமையை நடிப்பை சூர்யா தந்து விடுகிறார் என்பதே உண்மை.

ரெட்ரோ படத்துக்கு பிறகு நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ளார். அந்த படத்தை தொடர்ந்து இப்போது இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 என்ற படத்தில் அவர் நடித்திருக்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக மமீதா பைஜூ நடித்துள்ளார்.

- Advertisement -

மேலும் ராதிகா சரத்குமார் ரவீனா தாண்டன் உள்ளிட்டோரும் இந்த படத்தில் பிரதான கேரக்டர்களில் நடித்துள்ளனர். சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அடுத்ததாக போஸ்ட் புரொடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் இந்த படம் வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சூர்யா 46 படத்தின் கதை குறித்து அந்த படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி ஒரு நிகழ்ச்சியில் பேசிய போது கூறியதாவது, சூர்யா 46 படத்தின் கதை 45 வயது இளைஞனுக்கும் 20 வயது பெண்ணுக்கும் இடையிலான உறவைப் பற்றியது. இந்த படம் பலவிதமான உணர்ச்சிகளைக் கொண்டதாக இருக்கும். மேலும் கஜினி படத்தில் வரும் சஞ்சய் ராமசாமி கதாபாத்திரத்தின் பாணியில் இருக்கும் என்று நாகவம்சி கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்