- Advertisement -
Homeபொழுதுபோக்குபாஷா படத்தில் ரகுவரன் என்ட்ரி சீன் அப்போ ரசிகர்கள் என்ன பண்ணாங்க தெரியுமா? - ரகுவரனின்...

பாஷா படத்தில் ரகுவரன் என்ட்ரி சீன் அப்போ ரசிகர்கள் என்ன பண்ணாங்க தெரியுமா? – ரகுவரனின் சகோதரர் பகிர்ந்த தகவல்

- Advertisement -

கடந்த 1995-ஆம் ஆண்டு சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான பாஷா படம் மாபெரும் வெற்றியை பெற்றிருந்தது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நக்மா, ரகுவரன், ஜனகராஜ், விஜயகுமார், ஆனந்தராஜ், சரண்ராஜ் பல்வேறு நடிகர்கள் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கேங்ஸ்டர் திரைப்படமாக பார்க்கப்படும் இந்த பாட்ஷா படத்திற்கு இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது.

Basha

இந்த படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு இணையாக ரகுவரனும் வில்லன் கதாப்பாத்திரத்தில் தனது அசாத்தியமான நடிப்பினை வெளிப்படுத்தி இருப்பார். அதோடு ரஜினிக்கு எதிராக ஒரு வில்லன் இப்படி ஒரு நடிப்பை வழங்க முடியும் என்றால் அது ரகுவரனால் தான் முடியும் என்றும் அப்போதே பலராலும் பேசப்பட்டது.

- Advertisement -

இந்நிலையில் ரகுவரனின் இளைய சகோதரர் தற்போது தனியார் யூடியூப் சேனல் அளித்திருக்கும் ஒரு பேட்டியில் பாட்ஷா படத்தில் ரகுவரன் என்ட்ரி குறித்த சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : பாஷா படத்தினை காண நான் தியேட்டருக்கு சென்றிருந்தார். அப்போது நிறைய பிரபலங்களும் படத்தினை காண வந்திருந்தனர்.

Raghuvaran

ரஜினிகாந்த் பாட்ஷா படத்தில் என்ட்ரியாகும் போது ரசிகர்கள் முழுவதும் ஆரவாரம் செய்தனர். தியேட்டரே முழுவதுமே ஆரவாரம் செய்தனர். ஆனால் அதே வேளையில் என்னுடைய அண்ணன் ரகுவரன் என்ட்ரியானபோது அனைவருமே அமைதியாகிவிட்டனர். ஆனால் அவர்கள் ஏன் அப்படி அமைதியானார்கள் என்று தெரியவில்லை. அதன் பிறகு சிலரிடம் நான் ஏன் அமைதியாக இருக்கிறீர்கள்? என்று கேட்டேன்.

- Advertisement -

அதற்கு அவர்கள் அளித்த பதிலில் : ரகுவரன் வந்திருக்கிறார் அமைதியாக இருங்கள். அவர் நடிப்பில் மிரட்டி விடுவார் என்பது போன்று தெரிவித்தார்கள். அந்த அளவிற்கு ரகுவரன் தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்துவார் அதனை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் அப்படி அமைதியாக இருந்தார்கள் என்று எனக்கு பிறகு தான் தெரிந்தது என ரகுவரனின் சகோதரர் கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்