- Advertisement -
Homeபொழுதுபோக்குகள்ளக்குறிச்சி விவகாரத்தில் விஜயை தொடர்ந்து அரசுக்கு எதிராக பொங்கிய சூர்யா... அறிக்கை வெளியிட்டு கண்டன பதிவு...

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் விஜயை தொடர்ந்து அரசுக்கு எதிராக பொங்கிய சூர்யா… அறிக்கை வெளியிட்டு கண்டன பதிவு…

- Advertisement -

கள்ளச்சாராய புழக்கத்தால் கதறிக் கொண்டிருக்கிறது கள்ளக்குறிச்சி. சாராயத்தில் மெத்தனால் கலந்தது தெரியாமல் கருணாபுரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த மக்கள் குடிக்க, தற்போது அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மட்டுமல்லாமல் சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளிலும் சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

- Advertisement -

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஐ கடந்திருக்கிறது. கள்ளக்குறிச்சியில் எங்கு பார்த்தாலும் மரண ஓலமே காட்சியளிக்கிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் தந்தை, சகோதரன், மகன் என உறவுகளை இழந்து பலர் தவித்து வருகின்றனர். இன்னும் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

- Advertisement -

ஒவ்வொரு குடும்பத்திலும் மனித இழப்பை தாங்க முடியாமல் மக்கள் கதறி அழ, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் நேரில் சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள தமிழக அரசு, ஒரு நபர் விசாரணை ஆணையத்தையும் அமைத்திருக்கிறது.

 

இதுபோக உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய அமைச்சர் உதயநிதி, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். இந்த நிலையில் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய் முதல் முறையாக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தார். ஆட்சி அதிகாரத்தின் அலட்சியப் போக்கையே இதை காட்டுவதாக அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.

 

மேலும் கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார் விஜய். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க தனது கட்சி நிர்வாகிகளுக்கும் அவர் வலியுறுத்தினார். திரையுலகை சேர்ந்த பலரும் கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது அந்த பட்டியலில் நடிகர் சூர்யாவும் சேர்ந்து இருக்கிறார்.

 

இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் அவர், ஒரு சிறிய ஊரில் அடுத்தடுத்து மரணங்கள் நடப்பது, பேரிடர் காலத்தில் கூட நிகழாத துயரம் என்று கூறியிருக்கிறார். மதுவிலக்கு என்பது எல்லா கட்சிகளுக்கும் தேர்தல் நேரத்தில் பேசு பொருளாக மட்டுமே முடிந்து விடுகிறது. அரசும் அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்காலத்தில் இது போன்ற அவல மரணங்களை தடுக்க முடியும். சட்டவிரோதமாக விற்கப்படும் விஷ சாராய விற்பனையை தடுக்க தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் என்று சூர்யா கூறியிருக்கிறார்.

 

- Advertisement -

சற்று முன்